பி. கே. ஆரிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்த 2,800 பேர்!
- THINAGAREN SANGGAREN
- 24 May, 2026
மே 24,
PKR கட்சியிலிருந்து விலகி பெர்சாமாவில் இணைந்த ரபிசிக்கு ஆதரவாக ஜோகூரில் 2800 உறுப்பினர்கள் பெர்சாமான கட்சியில் இணைந்துள்ளனர். Tiram சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் PKR கட்சியின் ஜோகூர் மாநில முன்னாள் உதவித் தலைவருமான S.GOPALAKRISHNAN உட்பட முக்கிய PKR உறுப்பினர்கள் சொந்த கட்சியிலிருந்து விலகி BERSAMA கட்சியில் இணைந்துள்ளனர்.
Bersama கட்சியின் Johor மாநிலத் தலைவராக Abd Hamid Ali நியமிக்கப்பட்டுள்ள நிலையில் ஜோகூரின் 56 சட்டமன்றங்களிலும் BERSAMA கட்சி போட்டியிடவிருப்பதாகவும், நாடாளுமன்றத் தேர்தலுக்கு முன்னர் BERSAMA ஜோகூரில் போட்டியிடும் என TIRAM முன்னாள் சட்டமன்ற உறுப்பினர் S.GOPALAKRISHNAN தெரிவித்தார். தற்போது கட்சியில் இணைந்திருப்பவர்களில் பெரும்பாலும் PKR கட்சியிலிருந்து விலகியவர் என்றாலும் 1000கும் மேற்பட்டவர்கள் இளைஞர்கள் என்றும் ஜோகூரின் அனைத்து மாவட்டங்களிலும் புதிய உறுப்பினர்கள் இணையவிருப்பதாகவும் ஜோகூர் மாநில BERSAMA கட்சியின் தலைவர் Abd Hamid Ali தெரிவித்தார்.
தற்போது ஜோகூரில் BERSAMA கட்சிக்கு நல்ல வரவேற்பு இருப்பதாகவும், உறுப்பினர் சேர்க்கையில் தீவிரம் காட்டி வருவதாகவும், குறுகிய காலத்தில் சட்டமன்ற தேர்தலில் BERSAMA கட்சியின் வேட்பாளர்கள் போட்டியிடுவார்கள் என்றும் Tiram சட்டமன்ற முன்னாள் சட்டமன்ற உறுப்பினரும் PKR கட்சியின் ஜோகூர் மாநில முன்னாள் உதவித் தலைவருமான S.GOPALAKRISHNAN தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



