த.வெ.க.வில் இணைய திட்டமா? “தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்” - சி.வி.சண்முகம் காட்டம்
- Surendran Sumdraraj
- 26 May, 2026
சென்னை, மே 26-
அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் C.V. Shanmugam த.வெ.க.வில் இணைய உள்ளாரா என்ற கேள்விக்கு, “தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்” என்று காட்டமாகப் பதிலளித்த சம்பவம் தமிழக அரசியல் வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
அ.தி.மு.க.வில் சமீப காலமாக உட்கட்சி அரசியல் பரபரப்பு நீடித்து வரும் நிலையில், சி.வி.சண்முகம் மற்றும் எஸ்.பி.வேலுமணி அணியில் இருந்த 5 எம்.எல்.ஏ.க்கள் எடப்பாடி பழனிசாமிக்கு ஆதரவு தெரிவித்தனர். மேலும், 3 எம்.எல்.ஏ.க்கள் தங்களது பதவியை ராஜினாமா செய்து த.வெ.க.வில் இணைந்ததாகத் தகவல்கள் வெளியாகின.
இந்த நிலையில், சென்னை எம்.ஆர்.சி. நகரில் உள்ள தனது இல்லத்தில் இருந்து வெளியே வந்த சி.வி.சண்முகத்திடம் செய்தியாளர்கள் பல கேள்விகளை எழுப்பினர். “உங்கள் தரப்பில் எம்.எல்.ஏ.க்களின் எண்ணிக்கை 25-இல் இருந்து 17 ஆக குறைந்துவிட்டதே?” என்று கேள்வி எழுப்பப்பட்டபோது, “25 எண்ணிக்கை 35 ஆகக்கூட மாறலாம்; அதற்கு எவ்வளவு நேரம் ஆகப்போகிறது?” என்று பதிலளித்தார்.
தொடர்ந்து, “நீங்களும் த.வெ.க.வில் இணைய வாய்ப்பு இருக்கிறதா?” என்று நிருபர்கள் கேட்டபோது, சி.வி.சண்முகம் கடும் அதிருப்தியுடன், “தேவையில்லாத கேள்வி கேட்க வேண்டாம்” என்று பதிலளித்துவிட்டு அங்கிருந்து காரில் புறப்பட்டுச் சென்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



