புத்தாண்டுக் கொண்டாட்டத்தில் கூரை இடிந்ததில் 3 பெண்கள் படுகாயம்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 1,

பல்பொருள் அங்காடியின் கூரை இடிந்து விழுந்ததில் புத்தாண்டுக் கொண்டாட்டத்தின் சிறப்பு வணிகக் கடையிலிருந்த 3 பெண்கள் படுகாயம் அடைந்தனர். நேற்றிரவு 9.40 மணிக்கு இச்சம்பவம் குறித்து பொதுமக்களிடமிருந்து அவசர அழைப்பைப் பெற்றதும் சம்பவ இடத்திற்கு விரைந்ததாகக் கூச்சிங் மாவட்ட மீட்பு ஆணையம் தெரிவித்தது. Plaza கூச்சிங்கிலிருந்து பாதிக்கப்பட்ட 3 பெண்களையும் பத்திரமாக மீட்டு, சிகிச்சைக்காக மருத்துவமனைக்குக் கொண்டு சென்றதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

பாதிக்கப்பட்டவர்களில் இருவர் வாடிக்கையாளர் என்றும் ஒருவர் வணிக உரிமையாளர் என்றும் தெரிய வந்துள்ளது. கூரை இடிந்து விழுந்ததற்கானக் காரணத்தைக் காவல்துறையினர் விசாரித்து வருவதாகவும் எந்தவோர் உயிர் சேதமும் ஏற்படவில்லை என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது. இச்சம்பவத்தால் சம்மந்தப்பட்ட வணிகக் கட்டிடம் தற்காலிகமாக மூடப்பட்டிருப்பதாகவும் சீரமைப்புப் பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் Plaza வணிக நிறுவனம் தெரிவித்துள்ளது. இது தொடர்பானக் காணொலிகள் சமூகவலைத்தலங்களில் பரவி வரும் நிலையில் ஆதாரமற்ற செய்திகளை வெளியிட வேண்டாம் என வணிக நிறுவனம் வேண்டுகோள் வைத்துள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *