சிட்னி தாக்குதல்: மலேசியா ஆஸ்திரேலியாவுடன் உறுதியாக நிற்கிறது - அன்வார் இப்ராஹிம்

top-news

கோலாலம்பூர், டிச. 15-

ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள போண்தி பீச்சில் நேற்று நடந்த கொடூரமான துப்பாக்கிச் சூட்டுத் தாக்குதலில் குறைந்தது 15 பேர் உயிரிழந்தனர். ஹனுக்கா கொண்டாட்டத்தில் யூத சமூகத்தினரை குறிவைத்து நடத்தப்பட்ட இந்த தீவிரவாதத் தாக்குதலை மலேசியா வன்மையாகக் கண்டிக்கிறது.

மலேசியப் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் இந்தத் தாக்குதலைக் கடுமையாகக் கண்டித்தார். "பொதுமக்களை குறிவைத்து நடத்தப்படும் வன்முறைக்கு எந்தவித நியாயமும் இல்லை. குறிப்பாக இனம் அல்லது மத வேறுபாடு காரணமாக இத்தகைய தாக்குதல்கள் நடத்தப்படுவது ஒருபோதும் ஏற்றுக்கொள்ள முடியாது" என்று அவர் கூறினார்.

"மலேசியா இந்த கடினமான காலத்தில் ஆஸ்திரேலிய மக்களுடனும் அரசுடனும் உறுதியாக நிற்கிறது. காரணமானவர்களை அடையாளம் கண்டு சட்டப்படி நீதிமன்றத்தில் நிறுத்த அனைத்து முயற்சிகளையும் முழுமையாக ஆதரிக்கிறோம். இத்தகைய செயல்கள் எந்த மத நம்பிக்கையுடனும் தொடர்புடையவை அல்ல" என்று பிரதமர் தனது சமூக வலைதளப் பதிவில் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *