மதங்களைக் கேலி செய்வதை நிறுத்துங்கள்! பிரதமர் அறிவுரை!
- Sangeetha K Loganathan
- 04 Mar, 2025
மார்ச் 4,
இன மத நல்லிணக்கத்தைச் சீர்குலைக்கும் வகையிலானச் செயல்களைத் தவிர்க்கும்படி பிரதமர் அன்வார் வலியுறுத்தியதாக பிரதமர் அலுவலகத்தின் தலைமை செய்தித் தொடர்பாளர் Tunku Nashrul Abaidah தெரிவித்தார். இது தொடர்பானச் செய்தி அறிக்கையில் பிறர் நம்பிக்கையைக் கேலி செய்யவோ தவறாகச் சித்தரிப்பதையோ அனுமதிக்க முடியாது என மலேசியாவின் தேசிய கொள்கையான Rukun Negara வலியுறுத்துவதை அன்வார் மேற்கொளிட்டு நினைவுருத்தினார்.
சமூகத்தினரின் நம்பிக்கையைச் சீர்குலைத்து நகைச்சுவையாக்குவது கண்டிக்கத்தக்கது என்றும் 3R எனும் ஆட்சியர், இனம், மதம் தொடர்பான பிரச்சனைகளை எழுப்ப வேண்டாம் என்றும் அன்வார் வலியுறுத்தியதாக Tunku Nashrul Abaidah தெரிவித்தார். மக்களின் ஒற்றுமையைச் சீர்குலைக்கும் வகையிலானச் செயல்களைப் புரியும் முன்னர் சம்மந்தப்பட்ட நபர்கள் கவனமாக இருக்க வேண்டுமென பிரதமர் அன்வார் எச்சரிக்கை விடுத்துள்ளதாக Tunku Nashrul Abaidah தெரிவித்தார்.
Perdana Menteri Anwar Ibrahim mengingatkan semua pihak untuk mengelakkan isu 3R (raja, agama, kaum) yang boleh menggugat keharmonian negara. Beliau menegaskan kepentingan prinsip Rukun Negara dalam menjaga perpaduan susulan kontroversi melibatkan penyampai radio yang mempersendakan upacara agama lain.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



