கோலாலம்பூர், பிப். 26-
உலக மோட்டார் சைக்கிள் சாம்பியன்ஷிப் மோட்டோ3 பிரிவில் முழு சீசன் போட்டியைத் தொடங்க உள்ள இளம் மலேசிய பந்தய வீரர் ஹாகிம் டேனிஷ் ரம்லி மீது பிரதமர் பாராட்டை வெளிப்படுத்தியுள்ளார்.
“ஏழு வயதிலேயே பந்தயத்தில் ஈடுபட்டதாக ஹாகிம் கூறியபோது பிரதமர் ஆச்சரியமடைந்தார். இது நாட்டிற்குப் பெருமை. இத்தகைய திறமைகளை உருவாக்க அடித்தட்டு விளையாட்டு திட்டங்களை மேலும் விரிவுபடுத்த வேண்டும்,” என்று இளைஞர் விளையாட்டுத் துறை அமைச்சர் கூறினார்.
திரங்கானுவைச் சேர்ந்த 18 வயது ஹாகிம், மோட்டோஜிபி போன்ற பின்புலம் இல்லாத குடும்பத்தில் இருந்து வந்தாலும் தனது உழைப்பால் உலக அரங்கில் இடம்பிடித்துள்ளார். நாளை தாய்லாந்து கிராண்ட்பிரிக்ஸில் (GP) மோட்டோ3 பிரிவில் தனது முழு சீசன் பயணத்தை தொடங்க உள்ளார்.
இளம் திறமைகளுக்கு அரசாங்கத்தின் ஆதரவு தொடரும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.



