இன்னும் நிலுவையில் எதிர்க்கட்சித் தலைவர் தேர்வு – PN விளக்கம்
- Surendran Sumdraraj
- 04 Apr, 2026
கோலா நெருஸ், ஏப். 4-
பாராளுமன்ற எதிர்க்கட்சித் தலைவரின் தேர்வு இன்னும் இறுதியாக முடிவாகவில்லை என பெரிகத்தான் நேஷனல் (PN) தெரிவித்துள்ளது.
PN தலைவர் அகமச் சம்சூரி கூறியதாவது, இறுதி முடிவை எடுப்பதற்கு முன் சில செயல்முறைகள் இன்னும் நிறைவேற்றப்பட வேண்டியுள்ளது. “அனைவரும் சிறிது பொறுமையாக இருக்கும்படி கேட்டுக்கொள்கிறோம். இது விரைவில் தீர்வு காணப்படும்,” என்று அவர் செய்தியாளர் சந்திப்பில் தெரிவித்தார்.
மேலும், PAS தலைவர் அடி அவாங் தெரிவித்ததுபோல், எதிர்க்கட்சித் தலைவர் நியமனம் இன்னும் முடிவடையவில்லை என்பதையும் அவர் உறுதிப்படுத்தினார்.
இந்த தாமதம் கருத்து வேறுபாடு காரணமாக அல்ல என்றும், வரும் ஜூன் மாதத்தில் நடைபெறவுள்ள பாராளுமன்ற அமர்விற்கு முன் இன்னும் போதுமான நேரம் உள்ளதால் கவனமாக முடிவு எடுக்கப்படுகிறது என்றும் அவர் விளக்கினார்.
“நாம் இன்னும் ஆலோசனை செய்யும் நிலையில் இருக்கிறோம். முடிவு எடுக்கப்பட்டவுடன் அனைவருக்கும் அறிவிக்கப்படும்,” என்றார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



