கினபாத்தாங்கான் நாடாளுமன்றம், லாமாக் சட்டமன்ற இடைத்தேர்தலில் போட்டியிட மாட்டோம் – பெரிக்காத்தான் நேஷனல் முடிவு
- Tamil Malar (Reporter)
- 10 Dec, 2025
குவாந்தான், டிச. 10-
கினபாத்தாங்கான் நாடாளுமன்றத் தொகுதி, லாமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான இடைத்தேர்தலில் பெரிகாத்தான் நேஷனல் (PN) வேட்பாளர்களை நிறுத்த மாட்டோம் என்று அந்தக் கூட்டணி முடிவு செய்துள்ளது.
பாஸ் கட்சியின் துணைத் தலைவர் டத்தோ ஸ்ரீ துவான் இப்ராஹிம் துவான் மான் இன்று பகாங் மாநில சட்டமன்றக் கூட்டத்தொடர் முடிந்த பின்னர் விஸ்மா ஸ்ரீ பகாங்கில் செய்தியாளர்களிடம் கூறுகையில், “நேற்று கோலாலம்பூரில் நடைபெற்ற பெரிகாத்தான் நேஷனல் உயர்மட்டத் தலைவர்கள் கூட்டத்தில் இந்த முடிவு எடுக்கப்பட்டது” என்றார்.
கடந்த டிசம்பர் 5-ஆம் தேதி திடீர் மரணமடைந்த டத்தோ ஸ்ரீ புங் மொக்தார் ராடின் வகித்து வந்த இரு தொகுதிகளும் காலியாகியானதைத் தொடர்ந்து இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இதற்கான சிறப்புக் கூட்டத்தை டிசம்பர் 16-ஆம் தேதி தேர்தல் ஆணையம் நடத்தவுள்ளதாக ஆணையத்தின் செயலாளர் டத்தோ கைருல் ஷாஹ்ரில் நேற்று அறிவித்திருந்தார்.
பெரிகாத்தான் நேஷனல் போட்டியிடாததால், இந்த இரு தொகுதிகளிலும் ஆளும் கபுங்கான் ராக்யாட் சபா (GRS), பிற கட்சிகளுக்கு இடையே நேரடி மோதல் எதிர்பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



