ஹைக்கூ சுடரொளி கவிஞர் மகேந்திரன்
- Surendran Sumdraraj
- 03 Jun, 2026
கோலாலம்பூர், ஜூன் 3-
கவிக்கோ அப்துல் இரகுமான் நினைவு ஹைக்கூ பரிசுப் போட்டியின் பரிசளிப்பு விழா 2.6.2026 செவ்வாய்க்கிழமை சென்னையில் வெகு பிரமாண்டமாக நடைபெற்றது. டிஸ்கவரி புக் பேலஸ் மற்றும் இயக்குநர் லிங்குசாமி அவர்கள் ஐந்தாவது ஆண்டாக அனைத்துலக அளவில் முன்னெடுக்கும் நிகழ்ச்சியிது.
3500க்கும் அதிகமாக ஹைக்கூ கவிதைகள் இந்த ஆண்டு போட்டிக்கு வந்திருந்ததில் 53 ஹைக்கூ கவிதைகள் பரிசுக்குத் தெரிவு செய்யப்பட்டு நூலாக வெளியீடு செய்யப்பட்டது. அந்த வெற்றியாளர் பட்டியலில் அயலகத்திலிருந்து பரிசு பெறும் ஒரே வெற்றியாளராக மலேசியாவின் கவிஞர் மகேந்திரன் நவமணி அவர்கள் விளங்குகிறார். தமிழ்நாட்டின் பள்ளிக் கல்வித்துறை, தமிழ் வளர்ச்சி மற்றும் செய்தித்துறை அமைச்சர் மாண்புமிகு ராஜ்மோகன், இயக்குநர் லிங்குசாமி, இயக்குநர் முருகதாஸ் மற்றும் ஹைக்கூ பேராளுமைகள் வெற்றியாளர்களுக்குப் பரிசு வழங்கிச் சிறப்பித்தனர்.
கவிஞர் மகேந்திரன் நவமணி அவர்கள் 2023-இல் நடைபெற்ற கவிக்கோ அப்துல் இரகுமான் நினைவு ஹைக்கூ போட்டியில் பரிசு பெற்றுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது. புதுக்கோட்டையில் நடைபெற்ற 5-ஆவது உலகத் தமிழ் ஹைக்கூ மாநாட்டில் ‘ஹைக்கூ சுடரொளி விருது’ பெற்றதுடன் தம் ‘மழை நின்ற வீதி’ என்ற இரண்டாவது ஹைக்கூ நூலையும் வெளியீடு செய்திருந்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



