ஜெம் வீரமணி போக்சோ வழக்கு: பிரகாஷ் என்பவருக்கு போலீசார் சம்மன்
- Surendran Sumdraraj
- 22 Sep, 2026
சென்னை: ஜெம் கிரானைட்ஸ் நிறுவனத் தலைவர் ஆர்.வீரமணி தொடர்பான போக்சோ வழக்கில் விசாரணை தீவிரமடைந்துள்ள நிலையில், பிரகாஷ் என்பவருக்கு சென்னை போலீசார் சம்மன் அனுப்பியுள்ளதாகத் தகவல் வெளியாகியுள்ளது.
சிறுமி ஒருவருக்குப் பாலியல் தொல்லை அளிக்கப்பட்டதாகக் கூறப்படும் வீடியோ அடிப்படையில், கடந்த ஆண்டு அக்டோபரில் சென்னை மத்திய குற்றப்பிரிவின் விபச்சார தடுப்புப் பிரிவு போலீசார் போக்சோ உள்ளிட்ட சட்டப்பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். இந்த வழக்கில் ஜெம் வீரமணி மற்றும் அவரது கூட்டாளிகள் இருவர் பின்னர் கைது செய்யப்பட்டனர்.
விசாரணையின் தொடக்கத்தில் பாதிக்கப்பட்ட சிறுமியை அடையாளம் காண முடியவில்லை எனக் கூறி வழக்கை முடிக்க போலீசார் முயன்றதாகவும், ஆனால் சிறப்பு போக்சோ நீதிமன்றம் அதனை ஏற்காமல் மேலதிக விசாரணைக்கு உத்தரவிட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. தொடர்ந்து மேற்கொள்ளப்பட்ட விசாரணையில் பாதிக்கப்பட்ட சிறுமி அடையாளம் காணப்பட்டு, அவரது வாக்குமூலமும் நீதிமன்றத்தில் பதிவு செய்யப்பட்டது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



