சனுசியிடம் வாக்குமூலம் பெற கெடாவுக்கு போலீஸ் அதிகாரிகள் செல்லவுள்ளனர்

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஆக. 1-

ஜெம்போலில் அண்மையில் நடைபெற்ற அரசியல் பிரச்சார நிகழ்ச்சியில் இன உணர்வுகளைத் தூண்டும் வகையில் கருத்து தெரிவித்ததாகக் கூறப்படும் கெடா மாநில மந்திரி பெசார் டத்தோஸ்ரீ முகமது சனுசி முகமது நோரிடம் வாக்குமூலம் பெற மலேசிய அரச போலீஸ் (PDRM) அதிகாரிகளை அனுப்பவுள்ளதாக தேசிய போலீஸ் படைத் தலைவர் டான் ஸ்ரீ முகமது காலித் இஸ்மாயில் கூறினார்.

“இந்த விவகாரம் தற்போது தீவிர விசாரணையில் உள்ளது. கெடா மாநிலத்தில் உள்ள மந்திரி பெசாரின் வாக்குமூலத்தைப் பதிவு செய்வதற்காகத் தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு வருகின்றன. அதற்காக எங்கள் அதிகாரிகள் அங்கு அனுப்பப்படுவார்கள்,” என்று அவர் கூறினார்.

சிரம்பானில் உள்ள கிங் ஜார்ஜ் V தேசிய இடைநிலைப் பள்ளி வாக்குச்சாவடியை பார்வையிட்ட பின்னர் நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் அவர் இதனைத் தெரிவித்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *