போதைப்பொருளுடன் நால்வர் கைது! – கூலாய்!

- Sangeetha K Loganathan
- 16 Dec, 2024
டிசம்பர் 16,
கூலாயில் உள்ள குடியிருப்புப் பகுதியில் போதைப்பொருள் பயன்பாடு இருப்பதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சோதனை நடத்தப்பட்டதில் போதைப்பொருளுடன் 4 உள்ளூர் ஆடவர்கள் கைது செய்யப்பட்டுள்ளதாகக் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
33 முதல் 49 வயதுடைய நால்வரிடமிருந்து 1,036 gram எடையிலான heroin வகை போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர்களிடம் நடத்தப்பட்ட விசாரணையின் தொடர்ச்சியாக Bukit Batu பகுதியில் 21.78 gram எடையிலான heroin வகை போதைப்பொருளுடன் 43 வயது ஆடவரும் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து பறிமுதல் செய்யப்பட்ட போதைப்பொருளின் மதிப்பு RM11,600 என கணக்கிடப்பட்டுள்ளதாகவும் சுமார் 2000 பேர் பயன்படுத்த கூடிய போதைப்பொருள்களைப் பறிமுதல் செய்துள்ளதாகவும் கூலாய் மாவட்டக் காவல் ஆணையர் Tan Seng Lee தெரிவித்தார்.
Polis Kulai menahan empat lelaki dengan 1,036 gram heroin di Jalan Seelong-Ulu Tiram. Operasi susulan di Bukit Batu menangkap seorang lagi bersama 21.78 gram heroin. Dadah bernilai RM11,600 dirampas, mencukupi untuk 2,000 penagih.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *