RM2.4 Million மதிப்பிலானப் போதைப்பொருள் பறிமுதல்! - Datuk M Kumar
- Sangeetha K Loganathan
- 01 Jan, 2025
ஜனவரி 1,
ஜொகூரில் நடத்தப்பட்ட சோதனையில் 14 கிலோ எடையிலானப் போதைப்பொருள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார். Mutiara Rini குடியிருப்புப் பகுதியின் வாகன நிறுத்துமிடத்தில் போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டதாக அவர் தெரிவித்தார்.
EKSTASI, KETAMIN, SYABU, EKSTASI மாத்திரைகள் என பல வகையிலானப் போதைப்பொருள்கள் வாகனத்திலிருந்து பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்டுள்ள போதைப்பொருளின் மதிப்பு RM2.4 Million என கணக்கிடப்பட்டுள்ள நிலையில் கைது செய்யப்பட்ட இருவரையும் 7 நாள்கள் விசாரணைக் காவலில் விசாரணை நடத்தவிருப்பதாகவும் ஜொகூர் மாநிலக் காவல் துறை தலைவர் Datuk M Kumar தெரிவித்தார்.
Polis Johor merampas dadah bernilai RM2.4 juta dalam serbuan di Mutiara Rini. Dua suspek ditahan bersama pelbagai jenis dadah, termasuk ekstasi, ketamin, dan syabu. Kedua-dua suspek direman selama tujuh hari untuk siasatan lanjut
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



