RM171,700 மதிப்பிலான மதுபானங்களும் RM27,392 மதிப்பிலானச் சிகரெட்டுகளும் பறிமுதல்!

top-news

ஜனவரி 10,

வாகனத்திலிருந்து மதுபானப் பெட்டிகளை இறக்கிக் கொண்டிருந்த இருவரிடம் நடத்தப்பட்ட சோதனையில் முறையான வரி செலுத்தாத 146 பெட்டிகளில் இருந்த மதுபானங்கள் பறிமுதல் செய்யப்பட்டதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் Kumarasan Muniandy தெரிவித்தார். 

ஜொகூரின் Gelang Patah பகுதியில் மதுபானங்களைக் கடத்தியதாக  34 வயது 41 வயது உள்ளூர் ஆடவர்கள் இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் அவர்களிடம் மேலதிக விசாரணைகள் நடத்தப்பட்டு வருவதாகவும் காவல் ஆணையர் Kumarasan Muniandy தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட மதுபானங்களின் மதிப்பு RM171,700 என கணக்கிடப்பட்டுள்ளது. 

இதன் தொடர் சோதனையில் கடத்தல் சிகரெட்டுகளை விற்பனை செய்து வந்த 7 வெளிநாட்டினர்களையும் கைது செய்துள்ளதாக அவர் தெரிவித்தார். 21 முதல் 43 வயதுடைய 7 வெளிநாட்டினர்களிடமிருந்து RM27,392.80 மதிப்பிலானக் கடத்தல் சிகரெட்டுகள் பறிமுதல் செய்யப்பட்டதாக Iskandar Puteri மாவட்டக் காவல் ஆணையர் Kumarasan Muniandy தெரிவித்தார்.

Polis Iskandar Puteri menahan dua lelaki tempatan dan tujuh warga asing dalam dua kes berasingan berkaitan minuman keras dan rokok tidak bercukai. Rampasan melibatkan 146 karton minuman keras, 184 karton rokok, telefon bimbit, dan kenderaan bernilai lebih RM199,000.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *