RM 1 மில்லியன் மதிப்பிலானப் போதைப்பொருளுடன் இருவர் கைது!

top-news

டிசம்பர் 13,

ஜொகூரில் உள்ள TAMAN PERMATA KLUANG குடியிருப்புப் பகுதியில் உள்ள வீட்டில் போதைப்பொருள்கள் விற்பனை செய்யப்படுவதாகப் பெறப்பட்ட புகாரின் அடிப்படையில் சம்மந்தப்பட்ட வீட்டைக் காவல்துறையினர் சோதனையிட்டதில் RM 1 மில்லியன் மதிப்பிலான EKSTASI  வகை போதைப்பொருள்கள் கைப்பற்றதாகவும் சம்மந்தப்பட்ட வீட்டில் இருந்த இருவர் கைது செய்யப்பட்டுள்ளதாகவும் KLUANG மாவட்டக் காவல் ஆணையர் Bahrin Mohd Noh தெரிவித்தார்.

கைது செய்யப்பட்டவர்களிடமிருந்து 2 வாகனங்களும் RM600 ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டதாகவும் அவர் தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவரும் 26 வயது உள்ளூர் ஆடவர்கள் என்றும் இருவரும் metamfetamina போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் தெரிய வந்ததாகவும் Bahrin Mohd Noh தெரிவித்தார். கைது செய்யப்பட்ட இருவதும் மேலதிக விசாரணைக்காக 7 நாள்கள் விசாரணைக் காவலில் வைக்கப்பட்டுள்ளதாக அவர் தெரிவித்தார்.

Polis menahan dua lelaki tempatan berusia 26 tahun di Taman Permata, Kluang, dan merampas dadah jenis ekstasi bernilai RM1 juta. Dua kenderaan, RM600 tunai, dan dadah jenis metamfetamina turut dirampas. Kedua-duanya direman tujuh hari untuk siasatan

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *