வணிக மோசடியில் 48 பேர் கைது! RM820,150 மதிப்பிலானப் பொருள்கள் பறிமுதல்!
- Sangeetha K Loganathan
- 10 Dec, 2024
டிசம்பர் 10,
நெகிரி செம்பிலானில் நடத்தப்பட்ட 4 வெவ்வேறு சோதனைகளில் 48 பேர் கைது செய்யப்பட்டதுடன் RM820,150 மதிப்பிலானப் பொருள்கள், RM10,150 ரொக்கம், 8 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாகவும் Port Dickson மாவட்டக் காவல் ஆணையர் Maslan Udin தெரிவித்தார். கைது செய்யப்பட்ட 48 பேரும் வணிக மோசடியில் ஈடுபட்டு வந்தது முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளதால் தேசிய வணிகக் குற்றப்புலனாய்வுத் துறையின் விசாரணையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதாக அவர் தெரிவித்தார்.
கைது செய்யப்பட்டவர்களில் 35 பேர் உள்ளூர் நபர்கள் என்றும், 13 வெளிநாட்டினர்கள் என்றும் தெரிய வந்துள்ளது. அனைவரும் 19 முதல் 40 வயதுக்குட்பட்டவர்கள் என்றும் 40 ஆண்கள் 8 பெண்கள் என உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
Polis menahan 48 individu berusia 19-40 tahun dalam siasatan kes penipuan komersial di Port Dickson. Rampasan termasuk RM820,150 barangan, RM10,150 tunai, dan 8 kenderaan. Kes disiasat oleh Jabatan Siasatan Jenayah Komersial.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



