முதியோர் இல்லத்தில் உயிரிழப்பு: பராமரிப்பாளர் உட்பட 5 பேர் கைது

top-news
FREE WEBSITE AD

ஈப்போ, ஆக. 5-

 பேராக் மாநிலம் தஞ்சோங் ரம்புத்தானில் உள்ள பராமரிப்பு இல்லத்தில் தங்கியிருந்த 54 வயது ஆண் ஒருவர் உயிரிழந்த சம்பவம் தொடர்பாக, அந்த இல்லத்தின் பராமரிப்பாளர் உட்பட ஐந்து பேரை போலீசார் கைது செய்துள்ளனர்.

உயிரிழந்தவர் நேற்று பிற்பகல் சுமார் 2 மணியளவில் தஞ்சோங் ரம்புத்தான் சுகாதார நிலைய பணியாளர்களால் உயிரிழந்ததாக உறுதிப்படுத்தப்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து பேராக் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அல்வி சைனல் அபிடின் கூறுகையில், சம்பவ இடத்தில் மேற்கொள்ளப்பட்ட ஆரம்பகட்ட விசாரணையில் உயிரிழந்தவரின் உடலில் பல்வேறு காயங்களுக்கான தடயங்கள் கண்டறியப்பட்டதாகத் தெரிவித்தார்.

இந்த சம்பவத்திற்கான உண்மையான காரணத்தை கண்டறியவும், கைது செய்யப்பட்ட ஒவ்வொருவரின் பங்களிப்பு மற்றும் தொடர்பை உறுதிப்படுத்தவும் தீவிர விசாரணை நடைபெற்று வருவதாகவும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *