பெர்லிஸ் அரச குடும்பத்தை அவமதித்ததாகச் சந்தேக நபர் கைது

top-news

கங்கார், ஆக. 1-

பெர்லிஸ் அரச குடும்பத்தின் மாநில விருது வழங்கல் தொடர்பாக சமூக வலைத்தளத்தில் அவமதிப்பான கருத்துகளைப் பதிவிட்டதாகக் கூறப்படும் 37 வயதுடைய ஒருவரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருவதாக பெர்லிஸ் மாநில போலீஸ் தலைவர் டத்தோ முகமது அப்துல் ஹலிம் கூறினார்.

சமூக வலைத்தளப் பதிவைத் தொடர்ந்து கடந்த ஜூலை 31 ஆம் தேதி ஆறு போலீஸ் புகார்கள் பெறப்பட்டதாகத் தெரிவித்தார். அதன் அடிப்படையில் சந்தேக நபர் நேற்று கைது செய்யப்பட்டதாக அவர் கூறினார்.

இந்த வழக்கு குற்றவியல் சட்டத்தின் பிரிவு 504, 1998 ஆம் ஆண்டு தகவல் தொடர்பு மற்றும் பல்லூடகச் சட்டம் பிரிவு 233, மேலும் 1955 ஆம் ஆண்டு சிறிய குற்றங்கள் சட்டம் பிரிவு 14 ஆகியவற்றின் கீழ் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டுள்ளதாக அவர் விளக்கினார்.

இந்தச் சட்டங்களின் கீழ் குற்றம் நிரூபிக்கப்பட்டால், சந்தேக நபருக்கு அதிகபட்சமாக இரண்டு ஆண்டுகள் வரை சிறைத்தண்டனை அல்லது அதிகபட்சமாக 50,000 ரிங்கிட் வரை அபராதம் அல்லது இரண்டும் விதிக்கப்படலாம் என்றும் அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்