பாங்கி துப்பாக்கிச் சூடு! இருவர் மீது 30 குற்றச்சாட்டுகள்! - DATUK M.Kumar விளக்கம்!
- THINAGAREN SANGGAREN
- 27 May, 2026
மே 27,
நேற்று மூன்று தினம் பாங்கி சாலையில் காவல்துறையால் சுட்டுக் கொல்லப்பட்ட இருவரும் காவல் துறையால் கடந்த 4 ஆண்டுகளுக்கும் மேலாகத் தேடப்பட்டு வந்த குற்றவாளிகள் என தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK M.Kumar விளக்கமளித்தார். 25, 46 வயதுள்ள அவர்கள் இருவரும் கொலை, கொள்ளை, வாகனத் திருட்டு, ஆயுதக் கடத்தல் என 30 குற்றச் சம்பவங்களில் ஈடுபட்டவர்கள் என DATUK M.Kumar தெரிவித்தார். நெடுஞ்சாலை ஓரத்தில் உள்ள பல வீடுகளில் இந்த கும்பல் கொள்ளையில் ஈடுபட்டதாகவும் DATUK M.Kumar தெரிவித்தார்.
குற்றவாளிகளை சுமார் 500 மீட்டர் காவல்துறையினர் துரத்தியதாகவும் , காவல்துறையினரின் வாகனத்தை மோதி துப்பாக்கிச் சூடு நடத்தியதால் காவல்துறையினர் தற்காப்பிற்காக துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டதாகவும் குற்றவாளிகளின் வாகனத்திலிருந்து கொள்ளையில் பயன்படுத்தப்பட்ட ஆயுதங்களும் துப்பாக்கிகளுடன் தோட்டாக்களையும் பறிமுதல் செய்திருப்பதாக DATUK M.Kumar தெரிவித்தார். உயிரிழந்த இருவருடன் தொடர்புடையவர்கள் என நம்பப்படும் மேலும் 10 பேரையும் காவல்துறை தீவிரமாகத் தேடி வருவதாக தேசிய குற்றப்புலனாய்வுத் துறை இயக்குநர் DATUK M.Kumar தெரிவித்துள்ளார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



