சிலாங்கூரில் அதிரடி சோதனை: சிகரெட், சட்டவிரோத வேப் பொருட்கள் பறிமுதல்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஆக. 6-

 சிலாங்கூரில் நடத்தப்பட்ட ஒருங்கிணைந்த அதிரடி நடவடிக்கையில், வரி செலுத்தப்படாத கடத்தல் சிகரெட்டுகள் மற்றும் சட்டவிரோத வேப் பொருட்களை விநியோகம் செய்து வந்த இரண்டு முக்கிய கும்பல்களை மலேசிய போலீசார் முறியடித்துள்ளனர். இந்த நடவடிக்கையில் மொத்தம் RM12.7 மில்லியனுக்கும் அதிக மதிப்புள்ள பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

புக்கிட் அமான் உள்நாட்டு பாதுகாப்பு மற்றும் பொது ஒழுங்கு துறை (KDNKA) இயக்குநர் டத்தோஸ்ரீ முகமது யூஸ்ரி ஹசான் பஸ்ரி கூறுகையில், 'ஒப் டாரிங் ஆல்பா 3' மற்றும் 'ஒப் டாரிங் ஆல்பா 1' நடவடிக்கைகள் மூலம் இந்த வெற்றி கிடைத்ததாகத் தெரிவித்தார்.

கடந்த ஜூலை 28-ஆம் தேதி கோம்பாக், பத்து கேவ்ஸ் பகுதியில் உள்ள ஒரு வளாகத்தில் நடத்தப்பட்ட சோதனையில், கிளாங் பள்ளத்தாக்கு முழுவதும் வேப் பொருட்களை சேமித்து விநியோகிக்கும் மையம் கண்டுபிடிக்கப்பட்டது. அங்கு ஐந்து பேர் விசாரணைக்கு உட்படுத்தப்பட்டதுடன், 131,036 பெட்டிகள் வேப் பொருட்கள், 4,900 வேப் திரவ பாட்டில்கள் மற்றும் 25,510 மின்னணு புகைப்பிடிப்பு சாதனங்கள் பறிமுதல் செய்யப்பட்டன. இவற்றின் மொத்த மதிப்பு RM9.4 மில்லியன் என மதிப்பிடப்பட்டுள்ளது.

இந்தப் பொருட்கள் வர்த்தக விளக்கச் சட்டம் 2011, மின்னணு புகைப்பிடிப்பு சாதனங்களுக்கான சான்றிதழ் மற்றும் அடையாள உத்தரவு 2022 மற்றும் 2024 பொது சுகாதாரத்திற்கான புகையிலைப் பொருட்கள் கட்டுப்பாட்டு சட்டம் ஆகியவற்றை மீறியுள்ளதாக ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *