சுட்டுக்கொல்லப்பட்ட குற்றவாளியின் காதலி மீதும் 10 குற்றப்பதிவுகள்! காவல்துறை
- Thinagaren Sanggaren
- 13 Dec, 2025
டிசம்பர் 13,
மலாக்காவில் காவல்துறையினரால் சுட்டுக்கொல்லப்பட்ட மூவரும் அப்பாவிகள் என புகார் அளித்த 31 வயதான பெண் மீது முன்னமே 10 குற்றங்கள் நிலுவையில் உள்ளது என்றும் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவரின் மனைவி என அடையாளப்படுத்தும் அவரின் மனைவி அல்ல காதலி என்றும் மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR விளக்கமளித்தார். காவல்துறையால் சுட்டுக்கொல்லப்பட்ட ஆடவரின் உண்மையான மனைவி ஜொகூரில் இருக்கிறார். அவர்கள் பிரிந்து வாழ்கின்றனர். தற்போது குற்றச்சாட்டை முன்வைத்திருக்கும் பெண் அவருடைய சட்டப்பூர்வ மனைவி இல்லை என்பது உறுதியாகி உள்ளதாக மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR.
தற்போது காவல்துறைக்கு எதிராகப் புகா் அளிக்கும் பெண் மீது கடந்த 2012 ஆம் ஆண்டு வாகனத் திருட்டில் ஈடுபட்டுள்ளதாகவும் திருட்டு, கொள்ளை என 10 வழக்குகள் அவர் மீது முன்னமே பதிவு செய்யப்பட்டிருப்பதாகவும் மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR தெரிவித்தார். மேலும் கடந்த ஜூலை மாதம் அதே பெண் ஒரு கொள்ளை கூட்டத்துடன் ஜாசின் மாவட்டக் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார் என மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR தெரிவித்தார்.
மேலும் அதே பெண்ணுடைய அப்பாவும் காவல்துறையினரால் தேடப்படும் குற்றவாளி என அவர் தெரிவித்தார். 55 வயதான அவர் மீது கடந்த 2022 முதல் தற்போது வரையில் 24 குற்றங்கள் சுமத்தப்பட்டிருப்பதாகவும் காவல்துறையினரால் தீவிரமாகத் தேடப்படும் குற்றவாளி என்றும் மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR தெரிவித்தார். கடந்த டிசம்பர் 3 ஆம் நாள் மலாக்கா டுரியான் துங்காலில், சந்தேகத்திற்குரிய 3 உள்ளூர் ஆடவர்களைக் காவல்துறையினர் சோதனையிட்ட போது சம்மந்தப்பட்ட மூவரும் 30 வயதான காவல் அதிகாரியைப் பாராங் கத்தியால் தாக்கினர். அதன் பின்னரே காவல்துறையினர் துப்பாக்கிச் சூட்டை நிகழ்த்தியிதாக மலாக்கா மாநிலக்காவல்துறை தலைவர் DATUK DZULKHAIRI MUKHTAR விளக்கமளித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



