இணைய சூதாட்டம் & போதைப்பொருள் கடத்தல் கும்பலைச் சேர்ந்த 36 பேர் கைது!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 23,

சட்டவிரோதமாக இணைய சூதாட்டத்தை நடத்தி வந்ததாகவும் போதைப்பொருள்களைக் கடத்தியதாகவும் நம்பப்பட ஒரு கும்பலுக்கு எதிரானச் சோதனை நடவடிக்கையில் 5 உள்ளூர்வாசிகளுடன் 36 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாகப் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK DENNIS LIM தெரிவித்தார். பினாங்கு முழுவதும் உள்ள 31 தளங்களில் மேற்கொள்ளப்பட்ட சோதனை நடவடிக்கைகளின் மூலம் 27 முதல் 41 வயதுள்ள 36 நபர்களும் பல்வேறு குற்றப் பின்னணிகளைக் கொண்டவர்கள் என முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது. 

அவர்களிடமிருந்து உயர்தர கணிணிகள், வெளிநாட்டுத் தொடர்புள்ள கைத்தொலைப்பேசிகளுடன் 3 கிலோ எடையிலான MDMA போதைப்பொருள்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. கைது செய்யப்பட்டவர்களில் 37 வயது மலேசிய நபர் KETAMIN போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK DENNIS LIM தெரிவித்தார். பறிமுதல் செய்யப்பட்ட பொருள்களின் மொத்த மதிப்பு சுமர் RM 7 லட்சத்திற்கும் மேல் என பினாங்கு மாநிலக் காவல்துறை தலைவர் DATUK DENNIS LIM தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *