இந்து கோயிலை இடிக்க வசூல் செய்யும் ஆடவருக்கு எதிராகக் காவல்நிலையத்தில் புகார்!

top-news
FREE WEBSITE AD

ஜனவரி 25,

இந்து கோயில்களை இடிப்பதற்காக மலாய் ஆடவர் ஒருவர் சமூகவலைத்தலங்களில் நிதி திரட்டுவதற்கு எதிராக மலேசியா முழுவதும் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. பல அமைப்புகள் தனி நபர்கள் என பலரும் தனிப்பட்ட முறையில் இந்த போலிஸ் புகாரை அளித்து வருவதாகத் தெரிய வந்துள்ளது. இந்த முன்னெடுப்பைத் தீவிரப்படுத்துவதற்காக அரசியல் வேற்றுமைகளை ஓரங்கட்டி வைத்துவிட்டு TASK FORCE HNIDU TEMPLES எனும் புலனக் குழு அமைக்கப்பட்டு TAMIM DAHRI எனும் ஆடவருக்கு எதிராகக் காவல் நிலையங்களில் புகார் அளிக்கப்பட்டு வருகிறது. கிள்ளான், சிரம்பான், ஈப்போ, SKUDAI, MELAKA, ஆகிய காவல் நிலையங்களில் இந்த புகார்களைப் பொதுமக்கள் அளித்து வருகின்றனர்.

இந்துக் கோயில்கள் குறித்தான அடிப்படை புரிதல் இல்லாத ஒரு சில தனிநபர்கள் முன்னெடுக்கும் இப்படியான செயல்களால் நாட்டின் அமைதி பாதிக்கப்படும் என்கிற நோக்கத்துடன் இந்த போலிஸ் புகார்கள் அமைய வேண்டும் என TASK FORCE HNIDU TEMPLES நிர்வாகிகள் கேட்டுக்கொண்டுள்ளனர். இந்த நடவடிக்கையில் எந்தவோர் அரசியல் நோகமும் இல்லை என்பதால் தனிநபர்களாக இருந்தாலும் அமைப்புகளாக இருந்தாலும் காவல் நிலையத்தில் புகார் அளிக்க முன்வரலாம் என்றும் புகார் அளிப்பதற்கான நெறிமுறைகளை வழங்க மாநிலத்திற்கு ஒருவரைப் பொறுப்பாளராக நியமித்திருப்பதாகவும் TASK FORCE HNIDU TEMPLES தெரிவித்துள்ளது.

Laporan polis akan dibuat di beberapa negeri seperti berikut:

KUALA LUMPUR Kordinator : Sai Sara 011-1767 7462 

SELANGOR Kordinator : Surendran 010-259 2044 

NEGERI SEMBILAN Kordinator : Mahen 012-260 3054

PERAK Kordinator : GP Dave 011-1191 0846 

PULAU PINANG Kordinator : Kogilan Mahendran 012-486 1414

JOHOR Kordinator : Mohan 010-395 6360 

PAHANG Kordinator : Suren 017-757 7207

MELAKA Kordinator : Suresh 017-267 2352 

KEDAH Kordinator : Sarawanan 016-524 6103

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *