பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழுவில் நான்கு பெர்சாத்து சட்டமன்ற உறுப்பினர்கள் பதவியேற்பு

top-news

ஆராவ், ஜன, 8-

பெர்சாத்து கட்சியைச் சேர்ந்த நான்கு மாநில சட்டமன்ற உறுப்பினர்கள் (ADUN) வியாழக்கிழமை பெர்லிஸ் மாநில ஆட்சிக்குழு உறுப்பினர்களாக (Exco) பதவியேற்பு செய்து கொண்டனர்.

அவர்கள் முறையே இஸிசாம் இப்ராஹிம் (திதி திங்கி ADUN), மார்சிட்டா மான்சோர் (சேனா ADUN), மேகத் ஹஷிரத் ஹசான் (பாவ் ADUN, வான் ஜிக்ரி அஃப்தார் இஷாக் (தம்புன் துலாங் ADUN) ஆவர்.

இஸிசாம், சமய விவகாரம், வீடமைப்பு மேம்பாடு, மனித வள ஆட்சிக்குழு உறுப்பினராக நியமிக்கப்பட்ட நிலையில் மார்சிட்டா, பெண்கள், குடும்ப மேம்பாட்டு, கல்வி, ஒற்றுமை ஆகிய துறைகளின் ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொருப்பேற்றார்.

இதனிடையே மேகத் ஹஷிரத், விவசாயம், சுகாதார, தொழில்முனைவோர் மேம்பாட்டு ஆட்சிக்குழு உறுப்பினராகப் பொருப்பேற்ற வேளையில், வான் ஜிக்ரி அப்தார் இளையோர், விளையாட்டுத் துறைகளுக்கு பொறுப்பேற்கிறார்.

பெர்லிஸ் மந்திரி பெசார் அபு பக்கார் ஹம்ஸா, மாநில அரசாங்க மன்றத் தலைவராக ஆறு போர்ட்போலியோக்களை வைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த டிசம்பர் 28ஆம் தேதி, குவாலா பெர்லிஸ் சட்டமன்ற உறுப்பினரான அபு பக்கார், உடல்நலக் குறைவு காரணங்களால் தானாக பதவி விலகிய முந்தைய மந்திரி பெசார் மொஹ்ட் ஷுக்ரி ரம்லிக்குப் பதிலாக ஒன்பதாவது மந்திரி பெசாராக பதவியேற்றார்.

இந்த நியமனங்கள் பெர்லிஸ் மாநில அரசாங்கத்தை வலுப்படுத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *