“என் வாழ்க்கையை மாற்றிய படம் ‘பொல்லாதவன்’” – நடிகர் தனுஷ் உருக்கமான பகிர்வு

top-news
FREE WEBSITE AD

கோயம்புத்தூர், ஏப். 26-

தமிழ் திரைப்பட உலகின் முன்னணி நடிகர் தனுஷ் தனது திரைப்பட வாழ்க்கையில் முக்கிய திருப்புமுனையாக அமைந்த படம் குறித்து மனம் திறந்து பேசியுள்ளார். அவர் நடித்த பொல்லாதவன் தான் தனது வாழ்க்கையை மாற்றிய படமாக இருந்தது என அவர் தெரிவித்தார்.

சமீபத்தில் நடைபெற்ற ஒரு நிகழ்ச்சியில் பேசிய தனுஷ், ஆரம்ப காலங்களில் தனது உடல் அமைப்பு குறித்து பலரும் விமர்சித்ததாகக் கூறினார். “முன்பு என்னை மெலிந்தவன், பலவீனமானவன் என்று பார்த்தார்கள். ஆனால் ‘பொல்லாதவன்’ படத்திற்குப் பிறகு முதன்முறையாக என் தோற்றத்திற்கே பாராட்டுகள் கிடைத்தது” என்று அவர் நினைவுகூர்ந்தார்.

2007-ஆம் ஆண்டு வெளியான இந்த திரைப்படம், தனுஷின் நடிப்புத் திறனை புதிய உயரத்திற்குக் கொண்டு சென்றதுடன், ரசிகர்கள் மத்தியில் அவருக்கான பார்வையை முற்றிலும் மாற்றியதாகவும் கூறப்படுகிறது.

இந்த படத்தின் வெற்றியால் தனுஷ் தமிழ் திரையுலகில் ஒரு வலுவான நடிகராக நிலைநிறுத்தப்பட்டார். அதன் பிறகு அவர் தேர்ந்தெடுத்த கதாபாத்திரங்களும், நடித்த திரைப்படங்களும் அவரது வளர்ச்சிக்கு முக்கிய காரணமாக அமைந்தன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *