மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் ஹங் துவா ஜெயா அமைப்பின் ஏற்பாட்டில் பொங்கல் உற்சவம்
- Tamil Malar (Reporter)
- 22 Jan, 2026
ஆக்கம் - தி.கிரிஷன்
மலாக்கா,ஜன. 22 -
மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் ஹங் துவா ஜெயா அமைப்பின் ஏற்பாட்டில், தேசிய வகை புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளியுடன் இணைந்து “பொங்கல் உற்சவம் 2.0” சிறப்பாக முன்னெடுக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில் சுமார் 163 மாணவர்கள், 15 ஆசிரியர்கள் மலேசிய இந்தியர் இளைஞர் மன்ற உறுப்பினர்கள் ஆகியோர் கலந்து கொண்டு நிகழ்ச்சியை மிகச் சிறப்பாக வெற்றியடையச் செய்தனர்.
இந்நிகழ்ச்சியில் மாணவர்களுக்காக பல்வேறு விளையாட்டுப் போட்டிகள் ஏற்பாடு செய்யப்பட்டிருந்தன. காலை 8.00 மணிக்குத் தொடங்கிய நிகழ்ச்சி, காலை 11.30 மணியளவில் வெற்றிகரமாக நிறைவடைந்தது.
நிறைவு விழாவில் தேசியத் தலைவர் தனேஷ் பேசில் அவர்கள் சிறப்பு முகாமையராகக் கலந்துகொண்டார். அவருடன் திரு. கமல்நாதன், தலைமை ஆய்வாளர் அவர்களும் கலந்து கொண்டு நிகழ்ச்சியைச் சிறப்பித்தனர்.
இந்நிகழ்ச்சியைப் பள்ளியில் நடத்த அனுமதியும் முழு ஒத்துழைப்பும் வழங்கிய தேசிய வகை புக்கிட் லிந்தாங் தமிழ்ப்பள்ளி தலைமையாசிரியர் திரு. கிருஷ்ணன் அவர்களுக்கு மலேசியர் இந்தியர் இளைஞர் மன்றம், ஹங் துவா ஜெயா மனப்பூர்வமான நன்றிதனைத் தெரிவித்துக் கொண்டது. எதிர்காலத்திலும் இவ்வாறான பயனுள்ள நிகழ்ச்சிகளை ஒன்றிணைந்து நடத்துவோம் என்ற நம்பிக்கை இருப்பதாகவும் கூறினார்.
மேலும், மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் மலாக்கா மாநிலத் தலைவரும் மலேசிய இந்தியர் இளைஞர் மன்றம் ஹங் துவா ஜெயா கிளைத் தலைவருமாகிய திரு. கிருஷ்ணா தோகைநாதன் அவர்களுக்கும், ஹங் துவா ஜெயா அமைப்பின் துணைத் தலைவரான திரு. ஹரிபிரசாந்த் ராஜ் ராஜேந்திரன் அவர்களுக்கும், பொங்கல் திருநாளின் இயக்குநராக பங்காற்றிய குமாரி சசிலேக்கா முத்துக்குமாரன் அவர்களுக்கும், மேலும் இந்த நிகழ்ச்சி வெற்றியடைய முழுமையான ஒத்துழைப்பு வழங்கிய அனைத்து MIYC உறுப்பினர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் மனமார்ந்த பாராட்டுகளும் நன்றிகளும் தெரிவிக்கப்பட்டன.
இந்த நிகழ்ச்சி அனைவரின் ஒருங்கிணைந்த முயற்சியின் பலனாக மிகச் சிறப்பாக வெற்றியடைந்தது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



