போதைப்பொருளுடன் ஐவர் கைது! 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல்!
- Thinagaren Sanggaren
- 20 Jan, 2026
ஜனவரி 20,
சாலை போக்குவரத்துக்குப் பாதிப்பு ஏற்படுத்தும் வகையில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திய கும்பலைச் சோதனையிட்டதில் மொத்தம் 138 சம்மன்கள் வழங்கப்பட்டிருப்பதாகவும் 32 மோட்டார் சைக்கிள்கள் பறிமுதல் செய்யப்பட்டிருப்பதாகவும் PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Hadzrat Hussien Mion தெரிவித்தார். இன்று அதிகாலை பொன்தியான் ஜாலான் ALSAGOFF சாலையில் இச்சோதனை நடவடிக்கையை மேற்கொண்டதில் போதைப்பொருள் பயன்படுத்திய 5 உள்ளூர் ஆடவர்களையும் கைது செய்திருப்பதாக PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Hadzrat Hussien Mion தெரிவித்தார்.
அதிகாலை 2 மணிக்கு மோட்டார் சைக்கிளில் வந்த மூவர் போதைப்பொருள் உட்கொண்டிருப்பது பரிசோதனையில் தெரிய வந்ததாகவும் அதிகாலை 3.30 மணிக்கு 63 கிராம் syabu வகை போதைப்பொருளுடன் இருவர் கைது செய்யப்பட்டிருப்பதாகவும் ஐவரும் போதைப்பொருள் பயன்படுத்தியிருப்பது சோதனையில் உறுதி செய்யப்பட்டிருப்பதாகவும் PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Hadzrat Hussien Mion தெரிவித்தார். சட்டவிரோத மோட்டார் சைக்கிளில் ஈடுபட்ட 32 மோட்டார் சைக்கிள்களைப் பறிமுதல் செய்துள்ள நிலையில் மோட்டார் சைக்கிள் உரிமையாளர்களுக்குச் சம்மன் நோட்டிஸ் வழங்கியிருப்பதாகவும் PONTIAN மாவட்டக் காவல் ஆணையர் Hadzrat Hussien Mion தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



