விசிக மற்றும் ஐயூஎம்.எல். அமைச்சரவையில் இணைந்தன

top-news
FREE WEBSITE AD

சென்னை, மே 22-

முதலமைச்சர் Vijay தலைமையிலான தவெக அமைச்சரவையில் புதிதாக இணைந்துள்ள விடுதலை சிறுத்தைகள் கட்சி (விசிக) மற்றும் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் (IUML) அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கப்பட்டுள்ளன.

விசிக சார்பில் திண்டிவனம் தொகுதி எம்.எல்.ஏ. வன்னியரசும், இந்திய யூனியன் முஸ்லிம் லீக் சார்பில் பாபநாசம் தொகுதி எம்.எல்.ஏ. ஷாஜஹானும் இன்று அமைச்சர்களாகப் பதவியேற்றுக்கொண்டனர். அவர்களுக்கு ஆளுநர் ஆர்.வி. அர்லேகர் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார்.

இதனைத் தொடர்ந்து, புதிய அமைச்சர்களுக்கான துறை ஒதுக்கீடுகளும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளன. அதன்படி, விசிகவின் வன்னியரசுக்கு சமூகநீதித் துறை ஒதுக்கப்பட்டுள்ளது. மேலும் ஆதிதிராவிடர் மற்றும் பழங்குடியினர் நலன் சார்ந்த விவகாரங்களையும் அவர் கவனிப்பார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதேபோல், ஐயூஎம்.எல். கட்சியின் ஷாஜஹான் சிறுபான்மையினர் நலத்துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். அவரது பொறுப்பின் கீழ் சிறுபான்மையினர் நலன் மற்றும் வக்பு வாரியம் தொடர்பான துறைகளும் இடம்பெறும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *