போலிசாரின் கையை வெட்டிய ஆடவர் சுட்டுக் கொலை! – கோம்பாக்கில் பரபரப்பு!

top-news

நவம்பர் 12,

கோம்பாக்கில் உள்ள அடுக்குமாடிக் குடியிருப்புப் பகுதியில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியுடன் வன்முறையில் ஈடுபட்ட நிலையில் அவரைக் கைது செய்ய முயற்சித்த போலிசாரையும் தாக்கிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. நேற்று மாலை 4 மணியளவில் கொப்போங்கில் உள்ள Desa Amanpuri அடுக்குமாடிக் குடியிருப்பின் அருகில் ஆடவர் ஒருவர் பாராங்கத்தியுடன் திரிவதைக் கண்ட பொதுமக்கள் காவல்துறைக்குப் புகார் அளித்ததாகவும் சம்பவ இடத்திற்கு 5 போலிசார் விரைந்ததாகச் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார். 

வன்முறையில் ஈடுபட்டவர் வெளிநாட்டு ஆடவர் என்றும் மாலை 6.35 மணிக்கு அவர் அடுக்குமாடிக் குடியிருப்பில் உள்ள ஒரு வீட்டுக்குள் நுழைந்ததாகவும் Datuk Shazeli Kahar தெரிவித்தார். தொடர்ந்து கூச்சலிட்டுக் கொண்டிருந்த அந்த ஆடவரைக் காவல்துறையினர் கைது செய்ய முயற்சித்த போது 26 வயதான போலிசாரை அந்த ஆடவர் பாராங்கத்தியால் வெட்டியதாகவும் போலிசாரின் கை துண்டிக்கப்பட்டதாகவும் Datuk Shazeli Kahar தெரிவித்தார். 

இச்சம்வத்தின் போது அருகில் இருந்த காவல் அதிகாரிகள், தற்காப்புக்காக மட்டுமே அந்த வெளிநாட்டு ஆடவரைச் சுட்டதாகவும் Datuk Shazeli Kahar தெரிவித்தார். இச்சம்பவத்தின் போது மீட்பு அதிகாரி ஒருவருக்கும் சுகாதார அதிகாரி ஒருவருக்கும் காயம் ஏற்பட்டிருப்பதாவும் கை துண்டிக்கப்பட்ட போலிசார் கோலாலம்பூர் அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருவதாகவும் சிலாங்கூர் மாநிலக் காவல்துறை தலைவர் Datuk Shazeli Kahar தெரிவித்தார்.

https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்