சிலி நாட்டில் சக்திவாய்ந்த நிலநடுக்கம்
- Surendran Sumdraraj
- 27 May, 2026
சாண்டியாகோ,மே 27-
தென் அமெரிக்க நாடான சிலியில் இன்று சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இந்த நிலநடுக்கம் ரிக்டர் அளவுகோலில் 6.9 ஆக பதிவாகியுள்ளதாக அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் (USGS) தெரிவித்துள்ளது.
சிலியின் வடக்கு பகுதியில் உள்ள Antofagasta நகரத்திற்கு அருகே அதிகாலை இந்த நிலநடுக்கம் ஏற்பட்டதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. நிலநடுக்கத்தின் அதிர்வு அப்பகுதி முழுவதும் உணரப்பட்டதால் மக்கள் வீடுகளை விட்டு வெளியேறி சாலைகளில் தஞ்சமடைந்தனர்.
இந்த நிலநடுக்கம் சுமார் 100 கிலோமீட்டர் ஆழத்தில் ஏற்பட்டதாக ஆரம்ப தகவல்கள் கூறுகின்றன. பல கட்டிடங்கள் அதிர்ந்ததுடன், சில பகுதிகளில் மின்தடை ஏற்பட்டதாக உள்ளூர் ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன. இருப்பினும், பெரிய அளவிலான சேதம் அல்லது உயிரிழப்பு குறித்து இதுவரை அதிகாரப்பூர்வ தகவல் வெளியாகவில்லை.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



