வாய்ப்புகள் வருகிறது; ஆனாலும் தேவையில்லை அரசியல்! - மரினா இப்ராஹிம்

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஜூன் 6: தேர்தலுக்கு முன்னதாக பல வாய்ப்புகள் வந்தபோதிலும், பதவியிலிருந்து விலகும் ஸ்கூடாய் சட்டமன்ற உறுப்பினர் மரினா இப்ராஹிம், தான் அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை என்று திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

தனது ஸ்கூடாய் தொகுதியில் போட்டியிடப் போவதில்லை என்றும், அரசியலில் இருந்து விலகுவதாகவும் கூறினார்.

மற்ற கட்சிகள் தம்மை அணுகியதாகவும், ஆனால்  அவர்களின் வாய்ப்புகளை மரியாதையுடன் நிராகரித்துவிட்டதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அரசியலுக்குத் திரும்பப் போவதில்லை. அரசியலுடன் நேரடியாகத் தொடர்பில்லாத பல வழிகளில் சமூகத்திற்குச் சேவை செய்ய முடியும் என்று தாம் நம்புவதாக அவர் தெரிவித்தார்.

38 வயதான மரினா, மலாய் பெரும்பான்மைத் தொகுதிகளுடன் தொடர்புகொள்வதைத் தவிர்த்ததாகவோ அல்லது அத்தகைய பகுதிகளில் போட்டியிட விரும்பவில்லை என்றோ சமூக ஊடகங்களில் பரவிய குற்றச்சாட்டுகளையும் நிராகரித்தார். தனது முந்தைய அரசியல் பணிகளில் பெரும்பாலானவை மலாய் பெரும்பான்மைப் பகுதிகளை மையமாகக் கொண்டிருந்தன என்றும் அவர் குறிப்பிட்டார்.

2021-ல், ஒரு சமூக மையத்தை நிறுவுதல் மற்றும் உள்ளூர் ஆதரவைத் திரட்டுதல் உள்ளிட்ட அடிமட்டப் பணிகளை மேற்கொள்வதற்காகவும், இறுதியில் அந்தத் தொகுதியில் போட்டியிடுவார் என்ற எதிர்பார்ப்புடனும் லயாங்-லயாங்கிற்குத் தான் நியமிக்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அந்த நேரத்தில், தான் அரசியலுக்குப் புதியவர் என்றும், மேலும், பெரும்பான்மையான குடியிருப்பாளர்கள் மலாய்க்காரர்களாக இருந்த ஒரு கிராமப்புறத் தொகுதியில் ஆதரவைத் திரட்டும் பணி தனக்கு வழங்கப்பட்டதாகவும் அவர் கூறினார்.

அப்போது ஜொகூர் சுற்றுலா, இளைஞர் மற்றும் விளையாட்டு செயற்குழு உறுப்பினராக இருந்த ஒன் ஹபீஸ் காஸியை நான் எதிர்கொள்ள வேண்டியிருக்கும் என்றும் எதிர்பார்க்கப்பட்டது என அவர் தெரிவித்தார்.

கிராமங்களிலும், ஃபெல்டா குடியிருப்புகளிலும் பிரச்சாரம் செய்த, ஒரு மலாய்ப் பெண்ணாக, நான் நிச்சயமாக மலாய்ப் பகுதிகளுக்குள் நுழைய அஞ்சுபவள் அல்ல  என்று அவர் கூறினார்!

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *