பெரிய கட்சியுடன் இணைய வாய்ப்பு! - ஹம்சா

top-news
FREE WEBSITE AD

கோலாலம்பூர், ஏப் 11: Hamzah Zainudin தலைமையிலான “Reset” அரசியல் முயற்சியில் உள்ள 18 எம்.பிக்கள், புதிய கட்சி தொடங்குவதற்குப் பதிலாக ஏற்கனவே உள்ள பெரிய அரசியல் கட்சியுடன் இணைய வாய்ப்பு இருப்பதாக தெரிவித்துள்ளார்.

லாருட் தொகுதி எம்.பி.யான அவர், தற்போதைய அரசியல் சூழலில் புதிய கட்சி அமைப்பது சரியான முடிவாக இருக்காது எனக் குறிப்பிட்டார். அதற்கு பதிலாக, ஏற்கனவே உள்ள ஒரு கட்சியை வலுப்படுத்தி “Reset” செய்வதே நாட்டின் எதிர்காலத்திற்கு பொருத்தமானது என்றார்.

ஒரு கட்சி வெறும் கூட்டங்கள் நடத்தும் தளம் மட்டுமாக இருக்கக் கூடாது; அது தெளிவான கொள்கைகளுடன் மக்கள் போராட்டத்தை முன்னெடுக்கும் வலுவான அமைப்பாக இருக்க வேண்டும்.
சிலர் என்னிடம் புதிய கட்சி அமைப்பீர்களா அல்லது பழைய கட்சியில் சேர்வீர்களா என்று கேட்கிறார்கள். நான் புதிய கட்சி அமைப்பதை ஏற்கவில்லை. ஆனால், ஒரு பழைய கட்சியில் இணைந்து அதை பெரிதாக்குவது எனக்கு ஏற்றதாகும் என்று அவர் கூறினார்.

மலாக்காவில் நடைபெற்ற “Reset” இயக்கத்தின் ஹரி ராயா விருந்துபசரிப்பு நிகழ்ச்சிக்கு பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர்,  PAS கட்சியில் சேர்வாரா என்ற கேள்விக்கு நேரடி பதில் அளிக்காமல் தவிர்த்தார். அரசியலில் வதந்திகள் உறுதியானவை அல்ல. அதனால் இதுகுறித்து மேலும் கருத்து சொல்ல விரும்பவில்லை என்று தெரிவித்தார்

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *