ரூ.180 கோடியில் பிரபாஸ் கட்டும் பிரமாண்ட பங்களா

top-news
FREE WEBSITE AD

ஹைதராபாத், மே 28-

பான் இந்தியா நடிகரான Prabhas, ஐதராபாத்தில் ரூ.180 கோடி மதிப்பில் புதிய பிரமாண்ட பங்களா ஒன்றை கட்டி வருவதாக வெளியாகியுள்ள தகவல் ரசிகர்கள் மத்தியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

Baahubali திரைப்படத்துக்குப் பிறகு இந்திய அளவில் மிகப்பெரிய நட்சத்திரமாக உயர்ந்த பிரபாஸ், தற்போது அதிக பட்ஜெட் பான் இந்தியா படங்களில் மட்டுமே கவனம் செலுத்தி வருகிறார். சமீபத்தில் வெளியான The RajaSaab திரைப்படம் எதிர்பார்த்த வரவேற்பைப் பெறாத நிலையில், தற்போது Kalki 2, Spirit, Salaar 2 உள்ளிட்ட படங்களில் பிஸியாக நடித்து வருகிறார்.

இந்த நிலையில், ஐதராபாத்தின் Financial District பகுதியில் சுமார் 3 ஏக்கர் பரப்பளவில் புதிய சொகுசு பங்களா கட்டுமான பணிகள் நடைபெற்று வருவதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன. இந்த பங்களாவின் கட்டுமான செலவு மட்டும் சுமார் ரூ.180 கோடி என கூறப்படுகிறது.

புதிய வீட்டில் பிரமாண்ட நீச்சல் குளம், தனியார் திரையரங்கம், அதிநவீன ஜிம், விசாலமான தோட்டம், விருந்தினர் வசதிகள் உள்ளிட்ட பல்வேறு சொகுசு அம்சங்கள் இடம்பெறவுள்ளதாகக் கூறப்படுகிறது. இணையத்தில் வெளியாகியுள்ள மாதிரி புகைப்படங்களும் தற்போது வைரலாகி வருகின்றன.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *