“எல்ஐகே” பட புரொமோஷனில் ஏஐ தொழில்நுட்பத்தை புகுத்திய பிரதீப் ரங்கநாதன்

top-news
FREE WEBSITE AD

தமிழ் சினிமாவின் முன்னணி இயக்குனர்களில் ஒருவரான விக்னேஷ் சிவன் இயக்கத்தில், நடிகர் பிரதீப் ரங்கநாதன் நடித்துள்ள புதிய படம் ‘லவ் இன்சூரன்ஸ் கம்பெனி’ (எல்.ஐ.கே). இந்த படத்தில் எஸ்.ஜே. சூர்யா, கீர்த்தி ஷெட்டி, சீமான் உள்ளிட்டோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். செவன் ஸ்கிரீன் ஸ்டுடியோ மற்றும் ரவுடி பிக்சர்ஸ் நிறுவனங்கள் இணைந்து தயாரித்துள்ள இப்படத்திற்கு அனிருத் ரவிச்சந்தர் இசையமைத்துள்ளார்.

இந்நிலையில் ‘எல்ஐகே’ படத்தின் புரோமோஷனுக்காக பிரதீப் ரங்கநாதன் சாதுரியமாக ஒரு முடிவை எடுத்துள்ளார். அதாவது மொழிபெயர்ப்பாளராக ஒருவரை நியமிப்பதை காட்டிலும் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்திதான் ஆங்கிலத்தில் கூறுவதை அப்படியே தெலுங்கில் மொழி மாற்றம் செய்துவிட்டார். இதை அவர் மேடையிலேயே செய்ததால் ரசிகர்கள் பலரும் அவரது சாதுரியமான இந்த செயலை பாராட்டி வருகின்றனர். மேலும் தான் தனது கடந்த படத்தின் புரோமோஷனின்போது தான் ஏற்பாடு செய்திருந்த மொழிபெயர்ப்பாளரால் பங்கமாக கலாய்க்கப்பட்டேன் என்றும் தெரிவித்துள்ளார் இது தொடர்பான வீடியோக்கள் அனைத்து வேகமாக பரவி வருகிறது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *