ஐந்து வயதில் பாலர் பள்ளி, ஆறு வயதில் ஒன்றாம் ஆண்டு-பிரதமர்
- Tamil Malar (Reporter)
- 20 Jan, 2026
புத்ராஜெயா, ஜன. 20-
நாட்டின் கல்வி அமைப்பில் முக்கியமான மாற்றமாக, அடுத்த ஆண்டிலிருந்து பாலர் பள்ளி கல்வி ஐந்து வயதில் தொடங்கும் என்றும், ஆண்டு ஒன்று கல்வி ஆறு வயதில் ஆரம்பிக்கப்படும் என்றும் பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் அறிவித்தார்.
இருப்பினும், இந்த மாற்றம் உடனடியாக கட்டாயமாக்கப்படாது என அவர் தெளிவுபடுத்தினார். பெற்றோர், ஆசிரியர்கள், கல்வி நிறுவனங்கள் புதிய கல்விச் சூழலுக்குத் தயாராகுவதற்கான இடைவெளியை வழங்குவதே அரசின் நோக்கம் என அவர் கூறினார்.
புத்ராஜெயாவில் இன்று நடைபெற்ற 2026–2035 தேசிய கல்வித் திட்டம் (Rancangan Pendidikan Negara) அறிமுக விழாவில் உரையாற்றிய அவர், கல்வி சீர்திருத்தம் மனிதநேய அடிப்படையில் அமைய வேண்டும் என வலியுறுத்தினார்.
“குழந்தைகளின் வளர்ச்சி வேகம் ஒவ்வொருவருக்கும் மாறுபடும். அதனால், பெற்றோரின் முடிவுக்கும் குழந்தைகளின் தயார் நிலைக்கும் மதிப்பளிக்க வேண்டும்,” என பிரதமர் தெரிவித்தார்.
இந்த புதிய கல்வி அணுகுமுறை, குழந்தைகளின் அறிவாற்றல், உணர்ச்சி, சமூக வளர்ச்சியை சமநிலையாக மேம்படுத்தும் நோக்கில் உருவாக்கப்பட்டுள்ளதாக அரசு தெரிவித்துள்ளது. இது எதிர்கால தலைமுறைக்கு வலுவான கல்வி அடித்தளத்தை அமைக்கும் முக்கிய நடவடிக்கையாக பார்க்கப்படுகிறது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



