அரசுப் பணியாளர்களின் செயல்திறன் பாராட்டுக்குரியது – பிரதமர் அன்வார்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஏப். 9-

 மலேசியாவின் அரசுப் பணியாளர்களின் செயல்திறன் மிகுந்த பாராட்டுக்குரியதாக இருப்பதுடன், உலகளாவிய சவால்களை எதிர்கொண்ட சூழலிலும் அண்டை நாடுகளை விட சிறப்பாக செயல்பட்டுள்ளதாக பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தெரிவித்ததார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார முன்னேற்றம், உயர்மட்ட தலைமையின் முயற்சியால் மட்டுமல்லாது, அரசுத் துறை, தனியார் துறை மற்றும் மக்களின் ஒருங்கிணைந்த முயற்சியின் விளைவாகும் என அவர் மேலும் தெரிவித்தார்.

“இரண்டு வாரங்களுக்கு முன் Bank Negara Malaysia வெளியிட்ட தரவுகளின்படி, நாட்டின் பொருளாதார வளர்ச்சி எதிர்பார்த்ததை விட மேலோங்கியுள்ளது. முதலீடு வரலாற்றில் அதிகபட்ச அளவை எட்டியுள்ளது; பணவீக்கம் மிகவும் குறைந்த அளவில் உள்ளது; மேலும் ரிங்கிட்டின் மதிப்பு ஆசியாவில் சிறந்த செயல்திறனைக் காட்டுகிறது,” என்று அவர் கூறினார்.

இந்த சாதனைகள் அனைத்தும், அரசுப் பணியாளர்கள், தனியார் துறை, தொழிலாளர்கள் மற்றும் விவசாயிகள் ஒருங்கிணைந்து செயல்பட்டதன் விளைவாக ஏற்பட்டவை என அவர் வலியுறுத்தினார்.

மேலும், இந்த ஒருங்கிணைந்த அணுகுமுறை, எதிர்காலத்திலும் நாட்டின் பொருளாதார நிலைத்தன்மையை உறுதிப்படுத்தும் என பிரதமர் நம்பிக்கை தெரிவித்தார்.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *