நார்வே இளவரசி ஆஸ்ட்ரிட் மரணம் – அரச குடும்பத்தில் தொடரும் சோகம்

top-news
FREE WEBSITE AD

ஓஸ்லோ, செப். 14 –

நார்வே அரச குடும்பத்தைச் சேர்ந்த இளவரசி ஆஸ்ட்ரிட் தனது 94-ஆவது வயதில் மரணமடைந்தார். தனது சகோதரரும் முன்னாள் மன்னருமான ஹரால்டின் இறுதிச்சடங்கில் பங்கேற்ற சில நாட்களிலேயே அவர் உயிரிழந்தது நார்வே மக்களைப் பெரும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது.

நார்வே நாட்டில் 35 ஆண்டுகளுக்கும் மேலாக ஆட்சி செய்த மன்னர் ஹரால்ட் கடந்த மாதம் 89-ஆவது வயதில் உயிரிழந்தார். அவரது மறைவின் துயரத்தில் இருந்து நாட்டு மக்கள் இன்னும் மீளாத நிலையில், அவரது மூத்த சகோதரியான இளவரசி ஆஸ்ட்ரிட்டின் மறைவு அரச குடும்பத்திற்கு மேலும் ஒரு பேரிழப்பாக அமைந்துள்ளது.

கடந்த புதன்கிழமை நடைபெற்ற மன்னர் ஹரால்டின் இறுதிச்சடங்கில் ஆஸ்ட்ரிட் கண்ணீருடன் பங்கேற்றிருந்தார். அதுவே அவர் கடைசியாக பொதுவெளியில் தோன்றிய நிகழ்வாக அமைந்தது.

சகோதரரின் மறைவுக்கு சில நாட்களிலேயே ஆஸ்ட்ரிட்டும் உயிரிழந்த சம்பவம் நார்வே முழுவதும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

இளவரசி ஆஸ்ட்ரிட்டின் மறைவுக்கு புதிய மன்னர் ஹாகோன் ஆழ்ந்த இரங்கலை தெரிவித்துள்ளார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *