கினபாத்தாங்கான் இடைத்தேர்தல்: வாக்குப்பதிவுக்கான தயாரிப்புகள் சீராக நடைபெறுகின்றன
- Tamil Malar (Reporter)
- 19 Jan, 2026
கினபாத்தாங்கான், ஜன.19-
கினபாத்தாங்கான் நாடாளுமன்றம், லமாக் மாநில சட்டமன்றத் தொகுதிக்கான (DUN Lamag) இடைத்தேர்தலுக்கான முன்கூட்டிய வாக்குப்பதிவு நாளை நடைபெறவுள்ள நிலையில், அதற்கான அனைத்து தயாரிப்புகளும் சீராக முன்னெடுக்கப்பட்டு வருவதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்த முன்கூட்டிய வாக்குப்பதிவில் 196 போலீஸ் அதிகாரிகள், அவர்களின் துணைவியர்கள் பங்கேற்க உள்ளனர்.
தேர்தல் நிர்வாக அதிகாரி டாக்டர் எடி சையிசுல் ரிசாம் அப்துல்லா கூறுகையில், இன்று காலை 8 மணிக்கு தொடங்கிய தயாரிப்புப் பணிகள் கினபாத்தாங்கான் மாவட்ட காவல் துறை தலைமையக வளாகத்தில் உள்ள ‘தெராடாக்’ மையத்தில் நடைபெற்று வருவதாக தெரிவித்தார். இதுவே இந்த இடைத்தேர்தலுக்கான ஒரே முன்கூட்டிய வாக்குப்பதிவு மையமாகும் என்றார்.
இந்த செயல்முறையில் மலேசிய தேர்தல் ஆணையத்தின் (SPR) 14 அதிகாரிகள் ஈடுபட்டுள்ளதாகவும், இதுவரை எந்தவித சிக்கலும் இன்றி பணிகள் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும் அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



