ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்; 99 விழுக்காடு வேட்பாளர் பட்டியல் தயார் - பிகேஆர்

top-news
FREE WEBSITE AD

ஜொகூர் பாரு, ஜூன் 19 –

ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான (PRN) வேட்பாளர் பட்டியலை மக்கள் நீதி கட்சி (PKR) கிட்டத்தட்ட இறுதிப்படுத்தியுள்ளதாக அதன் பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் பூஸியா சாலே தெரிவித்துள்ளார்.

செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜொகூரில் 20 மாநில சட்டப்பேரவைத் தொகுதிகளிலும், நெகிரி செம்பிலானில் 16 தொகுதிகளிலும் பிகேஆர் போட்டியிடவுள்ளதாகக் கூறினார்.

வேட்பாளர் பட்டியல் தொடர்பான இறுதி ஆலோசனைகள் தற்போது நிறைவடையும் கட்டத்தில் இருப்பதாகவும், அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் சில நாட்களுக்குள் வெளியிடப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.

மேலும், அனுபவம் வாய்ந்த மூத்த தலைவர்களும் புதிய முகங்களும் இணைந்த சமநிலையான வேட்பாளர் பட்டியலை பிகேஆர் களமிறக்க உள்ளதாக அவர் குறிப்பிட்டார். அதேவேளையில், பெண்கள் மற்றும் இளைஞர்களுக்கான பிரதிநிதித்துவமும் தொடர்ந்து உறுதி செய்யப்படும் என்றார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *