ஜொகூர், நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: முக்கிய தேதிகளை நிர்ணயிக்கும் சிறப்புக் கூட்டம் தொடங்கியது
- Surendran Sumdraraj
- 12 Jun, 2026
புத்ராஜெயா, ஜூன் 12 –
ஜொகூர் மற்றும் நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தல்களுக்கான (PRN) முக்கிய தேதிகளை நிர்ணயிக்கும் சிறப்புக் கூட்டம் இன்று காலை 10 மணிக்கு தொடங்கியது.
புத்ராஜெயாவில் உள்ள மலேசிய தேர்தல் ஆணைய (SPR) தலைமையகமான மெனாரா எஸ்பிஆரில் நடைபெறும் இந்தக் கூட்டத்திற்கு, தேர்தல் ஆணையத் தலைவர் டத்தோ ஸ்ரீ ரம்லான் ஹரூன் தலைமை தாங்கினார்.
இந்தக் கூட்டத்தில் மாநிலத் தேர்தலுக்கான வாக்குப்பதிவு நாள், வேட்புமனுத் தாக்கல் நாள் மற்றும் முன்கூட்டிய வாக்குப்பதிவு நாள் உள்ளிட்ட முக்கிய அம்சங்கள் குறித்து இறுதி முடிவுகள் எடுக்கப்படவுள்ளன.
இரு மாநிலங்களிலும் சட்டப்பேரவைகள் கலைக்கப்பட்டதைத் தொடர்ந்து, தேர்தல் அட்டவணையை அதிகாரப்பூர்வமாக அறிவிக்கும் நோக்கில் இந்தக் கூட்டம் நடைபெற்று வருகிறது.
கூட்டம் நிறைவடைந்த உடனேயே தேர்தல் ஆணையம் செய்தியாளர் சந்திப்பை நடத்தும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதில் மாநிலத் தேர்தலுக்கான அதிகாரப்பூர்வ தேதிகள் மற்றும் நடைமுறைகள் குறித்து விரிவான அறிவிப்புகள் வெளியிடப்படும் எனத் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



