தேர்தல் பிரசாரத்தில் பணிவு அவசியம் – பிரதமர் அன்வார் அறிவுறுத்தல்
- Surendran Sumdraraj
- 26 Jun, 2026
டெங்கில், ஜூன் 26 –
ஜொகூர் மாநிலத் தேர்தலில் (PRN) போட்டியிடும் அனைத்து அரசியல் கட்சிகளும் நாகரிகமான முறையில் பிரச்சாரம் மேற்கொண்டு, நல்ல ஒழுக்கத்தைக் கடைப்பிடித்து, அகந்தையான அணுகுமுறையைத் தவிர்க்க வேண்டும் என்று பிரதமர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராஹிம் வலியுறுத்தியுள்ளார்.
செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜனநாயக அமைப்பில் மூன்று அல்லது அதற்கு மேற்பட்ட முனை போட்டிகள் நடைபெறுவது இயல்பான ஒன்றுதான் என்றாலும், தேர்தல் பிரச்சாரம் மரியாதையுடனும் மக்களை மதிக்கும் வகையிலும் இருக்க வேண்டும் என்றார்.
“மூன்று அல்லது ஆறு முனை போட்டிகள் ஜனநாயகத்தில் சாதாரணமானவை. ஆனால், பிரச்சாரம் நாகரிகமாக இருக்க வேண்டும். ஒழுக்கத்தைப் பேண வேண்டும். அதிகாரம் கிடைத்துவிட்டது என்ற எண்ணத்தில் அகந்தையுடன் நடந்து கொள்ளக் கூடாது,” என்று அவர் கூறினார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



