ஜொகூர் மாநிலத் தேர்தல்: MCA, MIC-யுடன் நாளை இறுதி ஆலோசனை – அகமட் சாஹிட்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, ஜூன் 6 –

ஜொகூர் மாநிலத்தின் 16-ஆவது சட்டமன்றத் தேர்தலுக்கான (PRN16) வேட்பாளர் தேர்வு இறுதிக்கட்டத்தை எட்டியுள்ள நிலையில், பாரிசான் நேஷனல் (BN) தலைவர் Ahmad Zahid Hamidi, கூட்டணிக் கட்சிகளான MCA மற்றும் MIC தலைவர்களுடன் நாளை முக்கிய ஆலோசனை நடத்தவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

தேசிய TVET தினம் 2026 நிகழ்வில் பிரதமர் Anwar Ibrahim கலந்து கொண்டதைத் தொடர்ந்து செய்தியாளர்களிடம் பேசிய அவர், ஜொகூர் மாநிலத் தேர்தலுக்கான வேட்பாளர் பட்டியல் கிட்டத்தட்ட இறுதி செய்யப்பட்டுவிட்டதாகக் கூறினார்.

“ஜொகூரைப் பொறுத்தவரை வேட்பாளர் தேர்வு பெரும்பாலும் முடிவடைந்துவிட்டது. நாளை MCA மற்றும் MIC உள்ளிட்ட கூட்டணிக் கட்சிகளுடன் கலந்துரையாடி அவர்களின் இறுதி நிலைப்பாடுகளை உறுதி செய்வேன்,” என்று அவர் தெரிவித்தார்.

அதேவேளையில், அம்னோவின் வேட்பாளர் தேர்வுப் பணிகளும் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக கூறிய அவர், அடுத்த வாரத்திற்குள் அனைத்து விவகாரங்களும் முழுமையாக முடிவுக்கு வரும் என நம்பிக்கை தெரிவித்தார்.

மேலும், வேட்பாளர் பட்டியல் வேட்புமனுத் தாக்கல் நாளுக்கு ஒரு வாரத்திற்கு முன்பாக அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *