மலாக்கா தேர்தல்: பெர்சத்துவுடன் அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை இல்லை – பஹ்மி பட்சில்

top-news
FREE WEBSITE AD

புத்ராஜெயா, செப். 29-

 மலாக்கா மாநிலத் தேர்தலை எதிர்கொள்வதற்காகப் பெர்சத்துவுடன் ஒத்துழைப்பது குறித்து பக்காத்தான் ஹராப்பான் (PH) இதுவரை எந்த அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தையையும் நடத்தவில்லை என அதன் தொடர்புத்துறை இயக்குநர் டத்தோ ஸ்ரீ பஹ்மி பட்சில் தெரிவித்துள்ளார்.

மலாக்காவில் நேற்று இரவு PH மற்றும் பெர்சத்து தலைவர்கள் சந்தித்ததாக வெளியான தகவல்கள் குறித்து செய்தியாளர்கள் எழுப்பிய கேள்விக்குப் பதிலளித்த அவர், அது வெறும் இரவு விருந்து நிகழ்ச்சி என ஊடகங்களில் செய்தி வெளியாகியுள்ளதாகக் கூறினார்.

“இந்த விவகாரம் என்னுடன் கலந்தாலோசிக்கப்படவில்லை. நான் அந்த நிகழ்ச்சியில் பங்கேற்கவில்லை. எனவே அதுகுறித்த தகவல் என்னிடம் இல்லை,” என்று பஹ்மி தெரிவித்தார்.

மலாக்காவில் நடைபெற்ற அந்த மூடப்பட்ட இரவு விருந்தில் PH மற்றும் பெர்சத்து மாநிலத் தலைவர்கள் சிலர் பங்கேற்றனர். பெர்சத்து தரப்பும் அது அதிகாரப்பூர்வ பேச்சுவார்த்தை அல்ல என்றும், மாநிலத் தேர்தலுக்கான தயாரிப்புகள் குறித்து கருத்துகளைப் பகிர்ந்துகொண்ட நிகழ்வு மட்டுமே என்றும் தெரிவித்துள்ளது.

எனினும், மலாக்கா PH தலைவர் அட்லி சஹாரி முன்னதாக, ‘PH Plus’ என்ற அடிப்படையில் ஒரே நோக்கத்தைக் கொண்ட கட்சிகளுடன் ஒத்துழைப்பது குறித்து பேச்சுவார்த்தைகள் நடைபெற்று வருவதாகவும், அதில் பெர்சத்துவும் இடம்பெற்றுள்ளதாகவும் கூறியிருந்தார். எந்தவொரு கூட்டணியும் பேச்சுவார்த்தைகள் முடிந்த பின்னரே அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என அவர் தெரிவித்திருந்தார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *