வாக்காளர்களுக்குப் பணம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டில் உடனடி விசாரணை கோரிக்கை

top-news

சிரம்பான், ஜூலை 29-

நெகிரி செம்பிலான் அம்னோ தலைவர் டத்தோ ஸ்ரீ ஜலாலுடின் அலியாஸ், 16ஆவது மாநிலத் தேர்தலை முன்னிட்டு வாக்காளர்களுக்கு அரசியல் கட்சி ஒன்று பணம் வழங்கியதாகக் கூறப்படும் குற்றச்சாட்டு தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று வலியுறுத்தியுள்ளார்.

நெகிரி செம்பிலான் பாரிசான் நேஷனல் (BN) துணைத் தலைவரும், மாநில தேர்தல் இயக்குநருமான அவர், மலேசிய ஊழல் தடுப்பு ஆணையம் (SPRM), தேர்தல் ஆணையம் (SPR) மற்றும் மலேசிய அரச போலீஸ் (PDRM) ஆகியவை இந்த விவகாரத்தில் உடனடியாக விசாரணை மேற்கொள்ள வேண்டும் என்றார்.

ஆரம்பத்தில் கிடைத்த தகவலை நம்புவது கடினமாக இருந்ததாகக் குறிப்பிட்ட ஜலாலுடின், மாநிலத் தேர்தலில் போட்டியிடும் அரசியல் கட்சி ஒன்று இத்தகைய செயல்களில் ஈடுபட்டிருப்பது ஏற்றுக்கொள்ள முடியாதது என்றார்.

மேலும், சில வாக்காளர்களுக்கு RM100, RM200 மற்றும் RM300 வரை பணம் வழங்கப்பட்டதாகவும், பொதுமக்களை அழைத்து அவர்களது அடையாள அட்டைகளைக் கேட்டு சேகரித்ததாகவும் குற்றச்சாட்டுகள் எழுந்துள்ளதாக அவர் தெரிவித்தார்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்