நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல்: 22,339 பாதுகாப்புப் படையினர் முன்கூட்டியே வாக்களிக்கின்றனர்

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 27-

நெகிரி செம்பிலான் 16ஆவது மாநிலத் தேர்தலை முன்னிட்டு, 22,339 பாதுகாப்புப் படையினர் மற்றும் அவர்களது துணையினர் நாளை நடைபெறும் முன்கூட்டிய வாக்குப்பதிவில் தங்களது ஜனநாயகக் கடமையை நிறைவேற்றவுள்ளனர்.

இந்த எண்ணிக்கையில் 16,884 ராணுவத்தினர் மற்றும் அவர்களது துணையினரும், 5,455 காவல்துறையினர் மற்றும் அவர்களது துணையினரும் இடம்பெற்றுள்ளனர்.

மாநிலம் முழுவதும் அமைக்கப்பட்டுள்ள 38 முன்கூட்டிய வாக்குச்சாவடிகளில் காலை 8.00 மணி முதல் வாக்குப்பதிவு தொடங்கும். வாக்குச்சாவடிகளின் இருப்பிடத்தைப் பொறுத்து, வாக்குப்பதிவு நிறைவு பெறும் நேரம் கட்டங்களாக நிர்ணயிக்கப்பட்டுள்ளதாகத் தேர்தல் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

முன்கூட்டிய வாக்குப்பதிவுக்காக ஏற்பாடு செய்யப்பட்டுள்ள முக்கிய மையங்களில் போர்ட் டிக்சனில் உள்ள தரைப்படை அடிப்படைப் பயிற்சி மையம் (PUSASDA), சிரம்பானில் உள்ள நெகிரி செம்பிலான் மாநில காவல்துறை தலைமையகம், செண்டாயான் விமானப்படைத் தளம், மேலும் நீலாயில் அமைந்துள்ள மாவட்ட காவல்துறை தலைமையகம் ஆகியவை அடங்கும்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *