வேட்புமனுத் தாக்கலுக்கு 4 நாட்களுக்கு முன்பே தேசிய முன்னணி–பி.என். ஒத்துழைப்பு முடிவு
- Surendran Sumdraraj
- 22 Jul, 2026
தம்பின், ஜூலை 22-
நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலை முன்னிட்டு, பெரிக்காத்தான் நேஷனல் (PN) மற்றும் பாரிசான் நேஷனல் (BN) இடையிலான அரசியல் ஒத்துழைப்பு, வேட்புமனுத் தாக்கல் நடைபெறுவதற்கு நான்கு நாட்களுக்கு முன்பே இறுதி செய்யப்பட்டதாக பாஸ் (PAS) கட்சியின் பொதுச் செயலாளர் டத்தோஸ்ரீ தக்கியுதீன் ஹாசான் தெரிவித்துள்ளார்.
தம்பினில் நடைபெற்ற தேர்தல் பிரச்சார நிகழ்ச்சியில் பேசிய அவர், இந்த ஒத்துழைப்பு தொடர்பான பேச்சுவார்த்தையை தாம், பார்ட்டி வவசான் நெகாரா (WAWASAN) தலைவர் டத்தோஸ்ரீ ஹம்சா சைனுடின், அம்னோ (UMNO) பொதுச் செயலாளர் டத்தோ டாக்டர் அஸ்ராஃப் வாஜ்டி துசுகி மற்றும் நெகிரி செம்பிலான் அம்னோ மாநில தலைவர்கள் இணைந்து இறுதி செய்ததாகக் கூறினார்.
நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தலை முன்னிட்டு எட்டப்பட்ட இந்த புரிந்துணர்வு, மலேசிய அரசியல் வரலாற்றில் முக்கியமான திருப்புமுனையாக அமையும் என்றும் அவர் குறிப்பிட்டார். தேசிய நலனைக் கருத்தில் கொண்டு இரு கூட்டணிகளும் இணைந்து செயல்படுவது காலத்தின் தேவையாக இருப்பதாகவும் அவர் தெரிவித்தார்.
Leave a Reply
Your email address will not be published. Required fields are marked *



