அம்பாங்கான் தொகுதியை மீண்டும் கைப்பற்றும் முனைப்பில் டாக்டர் முகமட் ரஃபி

top-news
FREE WEBSITE AD

சிரம்பான், ஜூலை 28-

நெகிரி செம்பிலான் 16ஆவது மாநிலத் தேர்தலில் (PRN), அம்பாங்கான் சட்டமன்றத் தொகுதியில் பெரிக்காத்தான் நேஷனல் (PN) வேட்பாளராக போட்டியிடும் டத்தோ டாக்டர் முகமட் ரஃபி அப்துல் மாலிக், கடந்த கால மக்கள் சேவை அனுபவத்தை நம்பிக்கையாகக் கொண்டு மீண்டும் அந்தத் தொகுதியைக் கைப்பற்றும் இலக்குடன் களமிறங்கியுள்ளார்.

அவர் கூறுகையில், அம்பாங்கான் தொகுதி வாக்காளர்கள் கட்சியை மட்டுமல்லாமல், வேட்பாளரின் சேவைப் பதிவையும் முக்கியமாகக் கருதுவதாகத் தெரிவித்தார். அரசியல் சார்பு, இனம் அல்லது மதம் என்ற வேறுபாடின்றி அனைத்து தரப்பு மக்களுக்கும் சேவை செய்த அனுபவம் தனக்கு வலுவான ஆதரவாக இருக்கும் என்றார்.

“நான் மக்களின் பிரதிநிதியாக இருந்தபோது, அவர்கள் எந்த அரசியல் கட்சியைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த இனத்தைச் சேர்ந்தவர்களாக இருந்தாலும், எந்த மதத்தைப் பின்பற்றினாலும் பாரபட்சமின்றி உதவி செய்தேன். அதனால், நான் எப்போதும் மக்களுக்காக பாடுபடுபவன் என்பதை அவர்கள் நன்கு அறிவார்கள்,” என்று அவர் கூறினார்.


ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *