நெகிரி செம்பிலான் மாநிலத் தேர்தல் முடிவை கணிப்பது கடினம் – அரசியல் ஆய்வாளர்

top-news

கோலாலம்பூர், ஆக. 1-

நெகிரி செம்பிலான் மாநில சட்டப்பேரவைத் தேர்தலின் (PRN) அரசியல் நிலவரத்தை முன்கூட்டியே கணிப்பது மிகவும் சவாலானதாக உள்ளதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்துள்ளனர்.

அரசியல் கூட்டணிகளில் ஏற்பட்டுள்ள புதிய மாற்றங்களே இந்த நிலைக்கு முக்கிய காரணமாகக் கூறப்படுகிறது. குறிப்பாக, பக்காத்தான் ஹராப்பான் (PH) கூட்டணியை எதிர்கொள்ள பாரிசான் நேஷனல் (BN) மற்றும் பெரிக்காத்தான் நேஷனல் (PN) இடையே ஏற்பட்டுள்ள புரிந்துணர்வு, மாநிலத்தின் தேர்தல் போட்டியை முந்தைய தேர்தல்களைவிட வித்தியாசமானதாக மாற்றியுள்ளது.

மேலும், தொகுதிப் பங்கீடு, பல்முனைப் போட்டிகள் மற்றும் வாக்காளர்களின் மக்கள் தொகை அமைப்பு ஆகியவை தேர்தல் முடிவை தீர்மானிக்கும் முக்கிய அம்சங்களாக உள்ளன என்றும் அவர் குறிப்பிட்டார். குறிப்பாக, கலப்பு இன வாக்காளர்கள் அதிகம் வசிக்கும் தொகுதிகளிலும், மலாய் பெரும்பான்மை கொண்ட பகுதிகளிலும் வாக்காளர்களின் மனநிலையை ஆழமாக ஆராய வேண்டிய அவசியம் இருப்பதாக அரசியல் ஆய்வாளர்கள் தெரிவிக்கின்றனர்.


https://tamilmalar.my/public/uploads/images/photogallery/maanphotogallery11042024_014825_%E0%AE%B5%E0%AE%BF%E0%AE%B3%E0%AE%AE%E0%AF%8D%E0%AE%AA%E0%AE%B0%20%E0%AE%87%E0%AE%9F%E0%AE%AE%E0%AF%8D.png

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

தேடல்

செய்தி வகை

குறிச்சொற்கள்

சமூக இணைப்புகள்