மலாய் வேட்பாளருக்கு மட்டும் வாக்களியுங்கள்! மகாதீர் அறிவுரை!

top-news
FREE WEBSITE AD

ஜூலை 1,

மலேசியா மலாய்க்காரர்களுக்கானது என்பதால் தேர்தலில் போட்டியிடும் மலாய் வேட்பாளருக்கு மட்டும் வாக்களியுங்கள் என்று முன்னாள் பிரதமர் மகாதீர் மலாய்க்காரர்களுக்கு வலியுறுத்தி உள்ளார். எந்த கட்சியாக இருந்தாலும் அவர்கள் மலாய்க்காரர்களை வேட்பாளராக நிறுத்தினால் அவர்களுக்கு வாக்களித்தால் போதும். மலேசியா தொடர்ந்து மலாய் நாடாக இருக்க வேண்டும் என்றால் ஆட்சியில் மலாய்க்காரர்கள் மட்டுமே இருக்க வேண்டும் என மகாதீர் தெரிவித்துள்ளார்.


மலாய் அல்லாதவர்கள் ஆட்சிக்கு வந்தால் மலாய் மொழி அழியும், மலாய் இனம் அழியும், மலாய் என்கிற நம் அடையாளம் அழியும். இறுதியில் மலாய்க்காரர்களுக்கு என ஒரு நாடு இருந்ததற்கான அடையாளமே இல்லாமல் போய்விடும் என முன்னாள் பிரதமர் மகாதீர் மலாய்க்காரர்களுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். இந்த நாடு மலாய் நாடாக இருக்குமா என்கிற கேள்வியும் இப்போது எனக்கு எழுந்துள்ளது. தேர்தலில் மலாய் வேட்பாளருக்கு மட்டும் மலாய்க்காரர்களின் வாக்கை செலுத்துங்கள் என முன்னாள் பிரதமர் மகாதீர் மலாய்க்காரர்களுக்கு வலியுறுத்தினார். 

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *