18 இந்தியர்கள்! 14 சட்டமன்றங்கள்! 7 கட்சிகள்! ஜொகூர் தேர்தலில் போட்டி!

top-news
FREE WEBSITE AD

ஜூன் 28, 

ஜொகூர் மாநிலச் சட்டமன்றத் தேர்தலுக்கான வேட்பு மனுத் தாக்கல் செய்யப்பட்டு பிரச்சாரங்கள் சூடு பிடித்திருக்கும் நிலையில் ஜொகூர் மாநிலத் தேர்தலில் 17 இந்திய வேட்பாளர்கள் போட்டியிடுகிறார்கள். பெரிக்காத்தான் கூட்டணியில் 5 இந்தியர்களும், பாரிசான் கூட்டணியில் 4 இந்தியர்களும், பக்காத்தான் கூட்டணியில் 4 இந்தியர்களும், பெர்சாமா கட்சியில் 2 இந்தியர்களும் மூடா கட்சியில் ஒருவரும் தனித்து ஒருவரும் என மொத்தம் 18 இந்திய வேட்பாளர்கள் 14 வெவ்வேறு சட்டமன்றங்களில் போட்டியிடுகின்றனர். 

பெரிக்காத்தான் கூட்டணியில் MIPP கட்சியின் DR.A.ARIVENTHARAN, PEMANIS சட்டமன்றத்திலும், 
PALOH சட்டமன்றத்தில் D.JEEVAKUMAR, 
PERMAS சட்டமன்றத்தில் Vela Tebakumaran, 
BUKIT சட்டமன்றத்தில் LINAH MANOH, 
KOTA ISKANDAR சட்டமன்றத்தில் ANNA PRAVINA என பெரிக்காத்தான் போட்டியிடும் 56 சட்டமன்றங்களில் 5 சட்டமன்றங்களில் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.

பக்காத்தான் கூட்டணியில் பி.கே.ஆரின் C.SUPRAMANI, BUKIT KEPONG சட்டமன்றத்திலும், 
GUNA BALAKRISHNAN, LAYANG LAYANG சட்டமன்றத்திலும் 
டி.ஏ.பியின் DR.A.RUBAN, PALOH சட்டமன்றத்திலும், 
SKUDAI சட்டமன்றத்தில் KARTIYAINI JEYABALAN என பக்காத்தான் போட்டியிடும் 56 சட்டமன்றங்களில் 4 சட்டமன்றங்களில் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.

பாரிசான் கூட்டணியில் ம.இ.காவின் K.RAVENKUMAR, KEMELAH சட்டமன்றத்திலும், 
KAHANG சட்டமன்றத்தில் V.RUGENDRAN, 
BUKIT BATU சட்டமன்றத்தில் R.KUMARAN, 
PERLING சட்டமன்றத்தில் P.PANNIR SELVAM என பாரிசான் போட்டியிடும் 56 சட்டமன்றங்களில் 4 சட்டமன்றங்களில் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர்.

புதிதாகத் தோற்றுவிக்கப்பட்ட BERSAMA கட்சியிலிருந்து PUTERI WANGSA  சட்டமன்றத்தில் NICHOLAS PAUL VINCENT, 
BUKIT BATU சட்டமன்றத்தில் தமிழி கோபாலக்கிருஷ்ணன் என பெர்சாமா போட்டியிடும் 15 சட்டமன்றங்களில் 2 சட்டமன்றங்களில் இந்தியர்கள் போட்டியிடுகின்றனர். 

மூடா கட்சியிலிருந்து BUKIT BATU சட்டமன்றத்தில் M.PREMANAND, 
சுயேட்சையாக BUKIT NANING சட்டமன்றத்தில் S. JEGHANAATHAN, 
PALOH சட்டமன்றத்தில் G.KAMALESWAREN என இருவர் சுயேட்சையாகப் போட்டியிடுகின்றனர். 

PALOH சட்டமன்றத்திலும் BUKIT BATU சட்டமன்றத்திலும் போட்டியிடும் மூவருமே இந்திய வேட்பாளர்கள் என்பதால் போட்டியிடும் 18 இந்திய வேட்பாளர்களில் 2 இந்திய வேட்பாளர்களின் வெற்றி உறுதி செய்யப்பட்டுள்ளது.

ITS AD

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *